பிரிட்டனுடன் ஸ்காட்லாந்து தொடர்ந்து இணைந்திருக்குமா?

Read Time:3 Minute, 20 Second

பிரிட்டனுடன் ஸ்காட் லாந்து சேர்ந்திருக்குமா என்ற கேள்விக்குறி எழுந் துள்ளது. இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மக்கள் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு இருப்பதே இதற்கு காரணம். இங்கிலாந்தும், ஸ்காட் லாந்தும் 1603ம் ஆண்டு மன்னராட்சியை பகிர்ந்து கொண்டாலும், தனித்தனி நாடுகளாகவே செயல்பட்டு வந்தன. “கிரேட் பிரிட்டன்’ உருவாகும் வகையில், ஸ்காட்லாந்தையும் இங்கிலாந்துடன் இணைக்க திட்டமிடப்பட்டது. இதன் அடிப்படையில், 1707ம் ஆண்டு மே 1ம் தேதி ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து பார்லிமென்ட்டுகள் கலைக்கப்பட்டு, பிரிட்டன் பார்லிமென்ட் உருவாக்கப் பட்டது. பிரிட்டனுடன் ஸ்காட் லாந்து சேர்ந்திருந்தாலும், இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து தனித்தனி மாநிலங்களாக, தங்களின் சொந்த சட்டங்களின் அடிப் படையில் செயல்பட்டு வருகின்றன. பிரிட்டனுடன், ஸ்காட்லாந்து சேர்ந்து 300 ஆண்டுகள் பூர்த்தியடைய உள்ளது. இதையொட்டி மக்களிடம் நடத்தப் பட்ட கருத்துக் கணிப்பில், இரு தரப்பினர் மத்தியில், கருத்து வேறுபாடுகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இங்கிலாந்து மக்கள், ஸ்காட்லாந்தை விரும்பாததும் தெரிய வந்துள்ளது. இங்கிலாந்தும், ஸ்காட் லாந்தும் இணைந்து இருப்பதற்கு மூன்றில் இரு பங்கினருக்கு அதிகமானோர் விருப்பம் தெரிவித்தாலும், 24 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 17 சதவீதத்தினர் ஸ்காட்லாந்து பிரிந்துவிட்டால், இங்கிலாந்து சிறப்பாக இருக்கும் என கருத்துக் கூறியுள்ளனர். ஸ்காட்லாந்திற்கு, அரசு நிதி அதிகமாக செலவழிக்கப்படுவதாக, 63 சதவீதம் பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் தொடர் பான சட்டங்கள் மீது, ஸ்காட்லாந்து எம்.பி.,க்கள் ஓட்டளிக்க உரிமை இல்லை என்றும் 62 சதவீதத்தினர் கூறியுள்ளனர்.

தங்களை பிரிட்டிஷார் என்று கூறுவதை விட, இங்கிலீஷார் என்று கூறுவதையே பிரிட்டன் மக்கள் விரும்புகின்றனர். இங்கிலாந்து நாட்டவர்கள், ஸ்காட்லாந்து நாட்டவர் களை விரும்புவதில்லை என்று கருத்துக் கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது. இதனால், பிரிட்டனுடன், ஸ்காட்லாந்து தொடர்ந்து நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post விமான குண்டு வீச்சில் பிரபாகரன் காயம்; இலங்கை பத்திரிகை வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்!!
Next post இமயமலை பனி உருகினால் இந்தியா பாக்., போர் வரும்?