அமெரிக்காவில் பெண் சாப்பிட்ட உணவில் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள முத்து..!!

Read Time:1 Minute, 57 Second

7529c83b-5992-45df-a6e6-31cd863a7242_S_secvpfஅமெரிக்க தலைநகர் வாஷிங்டனை சேர்ந்தவர் லிண்ட்சே ஹாஷ். சமீபத்தில் இவர் வாஷிங்டனில் இசாகுயா பகுதியில் உள்ள ஒரு இத்தாலி ஓட்டலுக்கு தனது கணவருடன் உணவருந்த சென்றார்.

அங்கு ‘புருட்டி டி மேர்’ என்ற இத்தாலியின் பாரம்பரிய உணவை ‘ஆர்டர்’ செய்தார். அது ஒருவகை கடல் உணவு ஆகும். சிறிது நேரத்தில் அந்த உணவை ஓட்டல் ஊழியர் சப்ளை செய்தார்.

அந்த உணவை லிண்ட்சே கடித்து சாப்பிட தொடங்கினர். அப்போது ஏதோ ஒன்று அவரது பல்லில் கடிபட்டது. அது மிகவும் கடினமாக இருந்தது. அதை கடித்ததும் பல் உடைந்து விடுவது போல மிக பலம் வாய்ந்ததாக இருந்தது.

இதனால் லிண்ட்சேவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. வாயில் கடிபட்ட பொருளை பார்த்த போது சிப்பிக்குள் இருக்கும் முத்து போன்று தெரிந்தது. எனவே உணவை அங்கு வைத்து சாப்பிடாமல் பார்சலாக பெற்று வீட்டுக்கு எடுத்து சென்றார்.

அங்கு வைத்து ஆய்வு செய்த போது அது ‘குயாஹாக்’ வகை பர்பிள் கல் முத்து என தெரிய வந்தது. இருந்தாலும் அதை பெல்லேவியூவில் உள்ள ஒரு ஆராய்ச்சி கூடத்துக்கு அனுப்பி பரிசோதனை நடத்தினார்.

அது ‘குயாஹாக்’ வகை முத்து தான் என உறுதி செய்யப்பட்டது. இது அரிய வகை முத்து ஆகும். அதன் மதிப்பு ரூ.40 ஆயிரம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் லிண்ட்சே ஹஸ் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஈராக்: ஷியா மசூதியில் இரட்டை தற்கொலைப்படை தாக்குதல் – 15 பேர் பலி…!!
Next post புனேயில் இருந்து சென்னை வந்த மருத்துவ கல்லூரி மாணவி மாயம் போலீஸ் விசாரணை…!!