நடுரோட்டில் லாரியை நிறுத்திவிட்டு 2 பேரை, விரட்டி விரட்டி கடித்துக் குதறிய டிரைவர் பொதுமக்கள் மடக்கிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்

Read Time:3 Minute, 13 Second

நடுரோட்டில் லாரியை நிறுத்திவிட்டு, டிரைவர் ஒருவர் 2 பேரை விரட்டி விரட்டி கடித்துக் குதறினார். வெறிபிடித்த அவரை பொதுமக்கள் விரட்டிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். டிரைவர் செல்வராஜ் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை சேர்ந்த லாரி அதிபர் செல்வக்குமார். அவருக்கு சொந்தமான லாரியை, திருச்சி மாவட்டம் துறைïரை சேர்ந்த செல்வராஜ் (வயது 40) என்பவர் ஓட்டி வந்தார். அவர் நேற்று மும்பையில் இருந்து இரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு சென்னை வந்தார். மண்ணடியில் உள்ள நிறுவனம் ஒன்றில் இரும்பு பாரத்தை இறக்கிவிட்டு, டிரைவர் செல்வராஜ் பூந்தமல்லிக்கு சென்று கொண்டு இருந்தார். லாரியில் அவருடன் மற்றொரு டிரைவர் முருகன் (30), கிளீனர் பழனி (32) ஆகிய இருவரும் அமர்ந்து இருந்தனர். கடித்து குதறல் பகல் 12 மணி அளவில், வியாசர்பாடி சர்மா நகர் அருகே செல்வராஜ் திடீர் பிரேக் போட்டு நடுரோட்டில் லாரியை நிறுத்தினார். ஏன் லாரியை நிறுத்தினாய்? என்று கேட்ட முருகனை கை, கால் மற்றும் உடலில் வெறி பிடித்தவர் போல் செல்வராஜ் கடித்துக் குதறினார். அருகில் இருந்த பழனியையும் கடித்தார். இதனால் பயந்து போன முருகனும் பழனியும் லாரியில் இருந்து கீழே குதித்து ஓடினார்கள். செல்வராஜ் அவர்களை பின்தொடர்ந்து விரட்டிச்சென்று கடிக்க முயன்றார். எதிரே யார் வந்தாலும் அவர்களையும் அவர் கடிக்க பாய்ந்தார். இதனால், ரோட்டில் சென்றவர்கள் அலறியடித்தபடி சிதறி ஓடினார்கள்.

மடக்கிப்பிடித்தனர்

சில இளைஞர்கள் தைரியமாக செல்வராஜை மடக்கிப்பிடித்து, கை, கால்களை கட்டிப்போட்டனர். தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னர்மன்னன் விரைந்து சென்று டிரைவர் செல்வராஜை சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

நாய் கடித்ததால் செல்வராஜ×க்கு வெறி பிடித்ததா, அல்லது அவர் இப்படி நடந்துகொண்டதற்கு வேறு காரணம் எதுவும் உள்ளதா? என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செல்வராஜிடம் கடிபட்ட முருகன், பழனி ஆகியோர், சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அதிகாரப்பூர்வ இல்லத்தில் குடிபுகுந்தார், அப்துல்கலாம்
Next post என் வளர்ச்சியை பார்த்து பயந்து மாநாடு நடத்திய திமுக-விஜயகாந்த்