12 ஆண்டுகளுக்கு முன்னர் உறைய வைத்த கருமுட்டை மூலம் ஆண் குழந்தையைப் பெற்ற சீனப்பெண்…!!

Read Time:4 Minute, 18 Second

e6182906-4c4b-4cef-af53-f0a01cd068f8_S_secvpfபொருளாதாரத் தேடல் மற்றும் குடும்ப சூழல் காரணமாக மகப்பேற்றை தள்ளிப்போடுவது உலகின் பலநாடுகளில் வாடிக்கையாகி விட்டது.

எனினும், பெண்களின் உடலமைப்பின்படி முப்பது வயதுக்குள் மட்டுமே அவர்களது உடலில் வீரியமான கருமுட்டைகள் உற்பத்தியாகும் என்று மருத்துவ ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இதனால், அந்த வயதுக்குள் பேறுக்காலத்தை விரும்பாத பெண்களின் கருப்பையில் மாதந்தோறும் சுழற்சி முறையில் உற்பத்தியாகும் கருமுட்டையை வெளியே எடுத்து, அதை குளிர்பெட்டிகளில் பக்குவப்படுத்தி பாதுகாக்கும் கருமுட்டை வங்கிகள் மேற்கத்திய நாடுகளில் அதிகரித்து வருகின்றன.

இதுமட்டுமன்றி கருப்பைக்கு செல்லும் பாதையில் அடைப்பு மற்றும் பிற உபாதைகளால் பாதிக்கப்படும் பெண்களின் கருமுட்டைகளை அகற்றி, அதனை ஆணின் விந்தணுவுடன் இணைத்து செயற்கை முறையில் குழந்தைப்பெற உதவும் சிகிச்சை முறைகளும் தற்போது பிரபலமடைந்து வருகின்றது.

அவ்வகையில், சீனாவின் ஷான்க்சி மாகாணத்தில் உள்ள டாங்டு மருத்துவமனையில் சுமார் ஒருலட்சம் கருமுட்டைகள் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் சுமார் 25 ஆயிரம் முட்டைகளை விந்தணுக்களுடன் இணைத்து சுமார் 4,300 செய்ற்கை கருத்தரிப்புகள் உருவாக்கப்பட்டு, வெற்றிகரமாக குழந்தைகளும் பிறந்துள்ளன.

இந்தமுறையில், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் இங்குள்ள லி என்ற பெண்ணுக்கு செயற்கை கருத்தரிப்பை உருவாக்க 12 கருமுட்டைகளை சேகரித்த டாக்டர்கள் அவற்றை லியின் கணவரது விந்தணுவுடன் இணைத்து 12 கருக்களை உருவாக்கினர். அவற்றில் இரண்டை லியின் கருப்பைக்குள் செலுத்திய பின்னர் அழகான ஆண் குழந்தையை அவர் பிரசவித்தார்.

சீனாவில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ள கூடாது என்ற சட்டம் இருந்ததால் அந்த சட்டம் விலக்கப்படும்போது அடுத்த குழந்தையை பெற்றுக் கொள்ளலாம் என லி தம்பதியர் தீர்மானித்தனர். அதுவரை நாளொன்றுக்கு முப்பது ரூபாயை கட்டணமாக செலுத்தி மீதி கருமுட்டைகளை மருத்துவமனையில் உள்ள குளிர்சாதனப் பெட்டகத்தில் வைத்து, பாதுகாப்பாக பராமரித்து வந்தனர்.

தற்போது, சீனாவில் ஒரு குழந்தை சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டதால் சேமித்து வைக்கப்பட்டுள்ள மீதி கருக்களின் மூலம் மீண்டும் ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள லி தம்பதியர் முடிவு செய்தனர்.

இதையடுத்து, 12 ஆண்டுகளுக்கு முன்னர் உறையவைத்த கருவின் மூலம் தற்போது மீண்டும் ஒரு ஆண் குழந்தையை லி ஈன்றெடுத்துள்ளார். கடந்த புதன்கிழமை பிறந்த அந்தக் குழந்தை 3 கிலோ 440 கிராம் எடையில் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளதாக டாங்டு மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் அதிக காலம் பாதுகாக்கப்பட்ட கருமுட்டையின் மூலம் பிரசவித்த முதல் பெண் என்ற சிறப்பை தற்போது லி(40) அடைந்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இதய நோயாளிகளுக்கு வரப்பிரசாதமான பேஸ் மேக்கரை கண்டுபிடித்தவர் மரணம்…!!
Next post ஆப்கானிஸ்தான்: தற்கொலைப்படை தாக்குதலில் 10 பேர் உயிரிழப்பு…!!