By 28 February 2016 0 Comments

உயிரிழந்த தாயாரின் சடலத்திற்கு அருகே 3 நாட்கள் அழுதுக்கொண்டிருந்த குழந்தை…!!

boy_rescue_002பிரித்தானிய நாட்டில் உயிரிழந்த தாயாரின் சடலத்திற்கு அருகே 3 நாட்களாக அழுதுக்கொண்டிருந்த குழந்தையை பொலிசார் மீட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள Plymouth நகர பொலிசாருக்கு கடந்த திங்கள்கிழமை அவசர அழைப்பு ஒன்று வந்துள்ளது.

அதில், ‘பூட்டியுள்ள வீட்டிற்குள் இருந்து குழந்தை ஒன்று அழுதுக்கொண்டிருக்கும் சத்தம் கேட்பதாக’ பெண் ஒருவர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

தகவலை பெற்ற பொலிசார் வீட்டை உடைத்து உள்ளே பார்த்தபோது, 31 வயதான Anneka Sharratt என்ற பெயருடைய பெண் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார்.

தாயாரின் உடலிற்கு அருகே 3 வயது நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று அழுதவாறு அமர்ந்துள்ளதை கண்டு பொலிசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உடனடியாக மருத்துவர்களை அழைத்து சடலத்தை சோதனை செய்தபோது, ‘இது கொலையால் நடந்த உயிரிழப்பு இல்லை என்றும், இயற்கையாகவே மரணம் நிகழ்ந்துள்ளதாக’ கண்டுபிடித்துள்ளனர்.

மேலும், சடலத்தை ஆய்வு செய்தபோது, தாயார் கடந்த வெள்ளிக்கிழமை(19.02.2016) அன்றே உயிரிழந்து இருக்கலாம் என பொலிசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

தற்போது தாயாரின் உயிரிழப்பிற்கு பிறகு ஆதரவற்றுள்ள குழந்தைக்கு உதவ அப்பகுதி மக்கள் ஓன்லைன் மூலமாக நிதி திரட்டி வருகின்றனர்.

இதுவரை 25 நபர்களிடம் சுமார் 515 பவுண்ட் வரை நிதி வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



Post a Comment

Protected by WP Anti Spam