விஜய், அஜித், சூர்யா, மாதவன் கூட்டணி

Read Time:1 Minute, 22 Second

042.jpgajith_070717_31.jpgபாலிவுட் சினிமாவில் நடிக்கும் ஹீரோக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் அவர்களுக்குள் போட்டி கிடையாது. சினிமா தொடர்பான நிகழ்ச்சிகள், பிரிமியர் ஷோ என்றால் அத்தனைபேரும் ஒன்றுகூடி விடுவார்கள். கோடம்பாக்கத்தில் அப்படியில்லை. சக நடிகரை போட்டியாளராக கருதி முறைத்துக் கொண்டு நிற்பதுதான் அதிகம். அந்தப் போக்கு மாறப்போகிறது என்பதற்கான உதாரணம்தான் இது. அஜித் நடித்து வெளி வந்திருக்கும் `பில்லா’ படத்தின் பிரத்யேக காட்சிக்கு விஜய், சூர்யா, கார்த்தி, மாதவன் என இளவட்ட ஹீரோக்கள் அத்தனை பேருக்கும் அழைப்பு விடுத்திருந்தார் அஜித். நுங்கம்பாக்கம் ஃபோர் ஃப்ரேம் தியேட்டரில் நடந்த இந்த காட்சிக்கு அத்தனைபேரும் குடும்ப சகிதமாக வந்திருந்தார்கள். அதுவும் ஒரே வரிசையில் அத்தனை பேரும் உட்கார்ந்து பார்த்தது கண்கொள்ளா காட்சி!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post யால, வில்பத்து தேசிய பூங்காவுக்கு செல்ல உல்லாசபயணிகளுக்கு தொடர்ந்து தடை விதிப்பு
Next post 31 மலேசியத் தமிழர்கள் மீதான வழக்கு வாபஸ் – ஜாமீனில் விடுதலை