சுவிஸில் அகதிகளை வெளியேற்றுவதற்கான வாக்களிப்பு தோல்வி…!!

Read Time:2 Minute, 24 Second

swiss1280145 (1)சுவிட்சர்லாந்தில், குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்களை நாடுகடத்த வேண்டுமா என்பதை தீர்மானிக்கும் வகையில் நடைபெற்றுவரும் வாக்கெடுப்பில் பெரும்பாலானோர் நாடுகடத்த வேண்டாம் என்று வாக்களித்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அதன் காரணமாக குற்றச்செயல்கள் கூடிவருவதாக குற்றஞ்சாட்டிய சுவிஸ் மக்கள் கட்சி, குற்றச்செயல்களில் ஈடுபட்டும் வெளிநாட்டவர்களை நாடுகடுத்துவது தொடர்பான பொது வாக்கெடுப்பவை முன்வைத்தது.

பத்து ஆண்டுகளில் இரண்டு சிறிய குற்றங்களைப் புரிந்த எந்தவொரு வெளிநாட்டவரும், மேல்முறையீடு செய்யும் உரிமை எதுவும் இல்லாமல், நாட்டை விட்டு வெளியேற்றப்படுவர் என்ற பிரேரணையை இன்று மக்கள் நிராகரித்து வாக்களித்துள்ளனர்.

தற்போது வரை சுமார் 63.9 சதவிகித மக்கள் வாக்களித்துள்ளனர்.

இதில் 58.2 (1,791,872) சதவிகித குடிமக்கள் ‘குற்றம் செய்த அகதிகளை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டாம்’ என்றும், 41.8(1,287,217) சதவிகித மக்கள் இந்த புதிய சட்டத்திற்கு ஆதரவும் தெரிவித்துள்ளனர்.

இன்னும் வாட் கண்டொன் தொடர்பான முடிவு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வரை, வெளிநாட்டவர்களுக்கு ஆதரவாகவே முடிவுகள் வெளிவந்துள்ளதால், சுவிஸ் மக்கள் கட்சி இந்த வாக்கெடுப்பில் தோல்வியை தழுவியுள்ளது.

கிட்டதட்ட 17 சதவீதம் வாக்கு வித்தியாசம் உள்ளதால் வாட் கண்டோனின் வாக்குகள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கள்ளக் காதலனின் உருவத்தில் பிறந்த குழந்தை: கொடூரமாக அடித்து கொலை செய்த தாயார்…!!
Next post வேகக்கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம் தனியார் பேருந்தை மோதியது…!!