சிகரெட் புகைப்பதை நிறுத்துமாறு கோரப்பட்டதால் ஆத்திரமடைந்து பஸ்ஸை கடத்திச் சென்ற பெண்…!!

Read Time:2 Minute, 35 Second

ertrtபஸ்ஸுக்குள் சிகரெட் புகைத்துக் கொண்டிருந்த பெண்ணொருவரிடம் சிகரெட் புகைப்பதை நிறுத்துமாறு அல்லது பஸ்ஸிலிருந்து வெளியேறுமாறு கூறியபோது, அப் பெண் ஆத்திரமடைந்து பஸ்ஸை கடத்திச் சென்ற சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

நியூயோர்க்கின் மன்ஹெட்டன் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை 7 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றதாக நியூயோர்க் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கெவின் ஓர்டிஸ் எனும் அதிகாரி இது தொடர்பாக கூறுகையில்,
“பஸ்ஸுக்குள் பயணியான பெண்ணொருவர் சிகரெட் புகைத்துக் கொண்டிருந்ததால், பஸ்ஸிலிருந்து வெளியேறுமாறு சாரதி கோரினார். ஆனால், அப் பெண் வெளியேற மறுத்துவிட்டார்.

அதையடுத்து, சாரதி தனது ஆசனத்திலிருந்து எழுந்து மற்றொரு பஸ்ஸுக்கு பயணிகளை மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.

அப்போது, மேற்படி பெண் சாரதி ஆசனத்தில் பாய்ந்து அமர்ந்து, பஸ்ஸை செலுத்திச் செல்ல ஆரம்பித்தார்” என தெரிவித்துள்ளார்.

அந்த பஸ் சிறிது தூரம் சென்றிருந்த வேளையில் பஸ்ஸை நிறுத்துவதற்காக ஒருவர் அனுப்பப்பட்டார். அவர் ஜன்னலினூடாகப் புகுந்து, பஸ்ஸை நிறுத்தினார் எனவும் கெவின் ஓர்டிஸ் தெரிவித்துள்ளர்.

மேற்படி பெண்ணை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இப் பெண் பஸ் சாரதியாக பணியாற்றியவர் எனவும் தொடர்ச்சியாக கடமைக்கு சமுகமளிக்காததால் கடந்த ஜூலை மாதம் பணியிலிருந்து நிறுத்தப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சட்டவிரோதமாக வாகனத்தை கையாண்டதாக இவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இப் பெண்ணின் உள ஆரோக்கியத்தை ஆராய்வதற்காக அவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சீர்காழியில் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகனை கொன்ற தாய்..!!
Next post அமெரிக்க மாணவர் வடகொரியாவில் கைது..!!