கோடீஸ்வர பிச்சைக்காரர் : பிச்சை எடுக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம்…!!

Read Time:3 Minute, 38 Second

sdfdfdபிரித்தானிய பிரதமருக்கு சமமாக ஒரு நாளில் 500 பவுண்ஸ் வருமானம் ஈட்டும் பிச்சைக்காரர் ஒருவர் நகரில் வலம் வந்துக்கொண்டு இருப்பதாக அந்நாட்டு கவுன்சிலர் ஒருவர் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ள நிலையில், இவ்வாறு பிச்சை எடுக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமாயின் அது அரசிற்கு வருமான இழப்பையும் ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

அரசாங்த்திற்கு வரி செலுத்தாத இவரது ஆண்டு வருமானத்தை கணக்கிட்டால், 12 மாதங்களில் 1,30,000 பவுண்ஸ் வருமானம் ஈட்டுகிறார். இது இலங்கை பெறுமதியில் 20,47,13,446 ரூபாவென கணக்கிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பிச்சைக்காரர் ஒரு நாளில் மட்டும் 500 பவுண்ஸ் (78,735 இலங்கை ரூபா) வருமானம் ஈட்டுகிறார். ஒரு வாரத்திற்கு 2,500 பவுண்ஸ் (3,93,679 இலங்கை ரூபா). ஈட்டுகின்றார்.

இங்கிலாந்தில் உள்ள வோல்வர்ஹாம்டன் நகர கவுன்சிலரான ஸ்டீவ் ஈவன்ஸ் என்பவரே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

வோல்வர்ஹாம்டன்நகரில் வசதிபடைத்த பிச்சைக்காரர் ஒருவரின் வருமானத்தை சக கவுன்சிலர் ஒருவர் மூலம் தெரிந்துகொண்டேன்.

அதாவது, பிரித்தானிய பிரதமரான டேவிட் கமெரூனின் ஆண்டு வருமானத்தை விட 12,000 பவுண்ஸ் மட்டுமே குறைவாக பெறுகிறார்.

அதே சமயம், பிச்சை எடுக்கும்போது ‘தனக்கு வீடு, வாசல் எதுவும் இல்லை’ எனக்கூறி பிச்சை எடுக்கிறார். ஆனால், உண்மையில் பல இலட்சம் மதிப்பிலான வீட்டில் இவர் ரகசியமாக தங்கி வருகிறார்.

வசதிபடைத்த, அதே சமயம் இளகிய மனம் உள்ளவர்களை குறிவைத்து இவர் பிச்சை எடுப்பதால், ஒரு நாளுக்கு 500 பவுண்ஸை விட கூடுதலாகவும் அவருக்கு கிடைக்கிறது.

இதுபோன்ற மக்களின் பெருந்தன்மையை தவறாக பயன்படுத்தி அதிகளவில் வருமானம் ஈட்டும் இதுபோன்ற பிச்சைக்காரர்களை நீதிமன்றத்தின் முன் நிறுத்தி சில கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.

ஒரு பிச்சைக்காருக்கு நாட்டின் குடிமகனின் சராசரி ஆண்டு வருமானத்தை விட கூடுதலாக கிடைக்கும் என்றால், இந்த பிச்சை எடுக்கும் தொழிலை நிச்சயமாக ஒழிக்க முடியாது. மேலும், பிச்சை எடுக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் அது அரசிற்கு வருமான இழப்பையும் ஏற்படுத்தும்.

எனவே, முக்கிய நகரங்களில் உள்ள பிச்சைக்காரர்கள் குறித்து தகவல்களை சேகரித்து அவர்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என ஸ்டீவ் ஈவன்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்ணொருவருக்கு அமிலத்தாக்குதல் மேற்கொண்ட சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு…!!
Next post சாரதி இல்லாமல் சென்ற கார் பஸ் உடன் மோதி விபத்து…!!