இங்கிலாந்தில் மாதவிடாய் நேரத்தில் பெண்களுக்கு விடுமுறை…!!

Read Time:2 Minute, 6 Second

c1ebc6f4-08b4-4839-8e04-46f2f90a7910_S_secvpfமாதவிடாய் நேரங்களில் பெண்களுக்கு மிகவும் உடல் சோர்வு ஏற்படும். சில பெண்கள் தாங்க முடியாத வலியால் அவதிப்படுவார்கள்.

ஆனாலும், வேலையில் இருக்கும் பெண்கள் இந்த உபாதைகளையும் பொறுத்துக் கொண்டு வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாய நிலை ஏற்படும்.

இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டல் நகரில் கோ எக்ஸ்சிஸ்ட் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான பெண்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்த நிறுவனத்தில் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. அதில் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு விடுமுறை அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை மருத்துவ விடுப்பாக கருதாமல் ‘ஆஃப்’ ஆக கருதப்படும் என நிறுவனம் கூறி உள்ளது.

இது தொடர்பாக நிறுவனத்தின் டைரக்டர்களில் ஒருவரான பெக்ஸ் பாஸ்டர் கூறும் போது, மாதவிடாய் நேரங்களில் பெண்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். சிலர் வலியால் துடிப்பார்கள். அவர்கள் அதை வெளிக்காட்ட முடியாமல் தவிப்பார்கள். இது இயற்கையாக பெண்களுக்கு ஏற்படும் ஒரு அசௌகரியம். எனவே தான் அவர்களுக்கு விடுமுறை வழங்க நாங்கள் முடிவு செய்து உள்ளோம் என்று கூறினார்.

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு விடுமுறை அளிக்கும் முறை சீனா, ஜப்பான், தென் கொரியா, தைவான் ஆகிய நாடுகளில் ஏற்கனவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முதல் குழந்தை லீப் வருடத்தில் பிறந்த நிலையில் 2–வது குழந்தையையும் லீப் வருடத்தில் பெற்ற பெண்…!!
Next post புதுவண்ணாரப்பேட்டையில் கண்டக்டரை தாக்கிய 2 பேர் கைது…!!