வலது காலுக்கு பதில் இடது காலில் சத்திர சிகிச்சை..!!

Read Time:2 Minute, 3 Second

timthumb14 அகவை பாடசாலை மாணவி ஒருவரின் வலது காலில் ஏற்பட்டிருந்த கட்டியை அகற்றுவதற்காக இடது காலில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட சம்பவம் ஒன்று தொடர்பில் காவல்துறையில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் பேராதனை மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளது.

பிலிமதலாவையை சேர்ந்த இந்த மாணவி 10 ஆம் தரத்தில் கல்வி பயின்று வருகின்றார்.

இவருக்கு வலது காலில் கட்டி ஒன்று ஏற்பட அதற்கு சிகிச்சை பெற மருத்துவமனையில் அனுமதி பெற்றுள்ளார்.

இதன்போது அவருக்கு இடது காலில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மருத்துவரிடம் வினவிய போது, இடது காலிலும் கட்டி இருந்ததாக மருத்துவர் தம்மிடம் தெரிவித்ததாக குறித்த பிள்ளையின் தந்தை காவல்துறையில் முறையிட்டுள்ளார்.

இது தொடர்பில் பேராதெனிய மருத்துவமனையின் பேச்சாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,

குறித்த பிள்ளையில் இரண்டு காலிலும் கட்டிகள் இருந்ததுள்ளன.

எனினும் வலது காலில் வேதனை அதிகமாக இருந்ததால் முதலில் குறித்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படும் என பிள்ளையின் உறவினர்கள் எதிர்பார்திருந்தாலும், எக்ஸ்ரே அறிக்கையின்படி மருத்துவர் குறித்த பிள்ளையின் இடது காலில் முதலில் சத்திர சிகிச்சை மேற்கொண்டுள்ளதாக பேச்சாளர் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஹட்டனில் பஸ் விபத்து – மாணவன் பலத்த காயம்..!!
Next post இளைஞனின் புதைகுழிக்கு பொலிஸ் பாதுகாப்பு..!!