இங்கிலாந்தின் 84 வயது பத்திரிகை அதிபர் முர்டோக் 4–வது திருமணம்: முன்னாள் மாடல் அழகியை மணந்தார்…!!

Read Time:2 Minute, 20 Second

586bd473-1cb2-4c79-a6e0-fe4ab7df2e07_S_secvpfஇங்கிலாந்து பத்திரிகை அதிபர் ரூபெர்ட் முர்டோக். 84 வயதான இவர் ஏற்கனவே 3 பெண்களை திருமணம் செய்துள்ளார். கடந்த 2013–ம் ஆண்டு தனது 3–வது மனைவி வென்டி டெங்கை விவாகரத்து செய்தார்.

இந்த நிலையில் ஜெர்ரி ஹால் என்ற 59 வயது பெண்ணுடன் அவருக்கு காதல் மலர்ந்தது. ஜெர்ரி ஹால் இங்கிலாந்தின் முன்னாள் மாடல் அழகி ஆவார். இவரும் ஏற்கனவே திருமணம் ஆனவர். தனது கணவர் ஜக்கர் என்பவரை கடந்த 1999–ம் ஆண்டு விவாகரத்து செய்தார். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த ஒரு ஆண்டாக காதலித்த முர்டோக்– ஜெர்ரி ஹால் ஜோடிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அதை தொடர்ந்து நேற்று லண்டனில் பிளீட் தெருவில் உள்ள செயின்ட் பிரைட்ஸ் கிறிஸ்தவ தேவாலயத்தில் இவர்களது திருமணம் நடந்தது.

இதில் முர்டோக்கின் முன்னாள் மனைவிகளுக்கு பிறந்த 4 மகள்களும், ஜெர்ரியின் முன்னாள் கணவருக்கு பிறந்த 2 மகன்களும் கலந்து கொண்டு வாழ்த்தினர். முர்டோக் முதலாவதாக ஆஸ்திரேலியாவின் பாரிகா புக்கர் என்ற பெண்ணை மணந்தார். 2–வதாக நிருபர் அன்னாடோர்வையும், 3–வதாக வென்டி டெங்கையும் திருமணம் செய்து இருந்தார்.

முர்டோக் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர். தற்போது அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளார். முன்னாள் மாடல் அழகி ஜெர்ரி ஹாலுக்கும் முன்னாள் கணவர் ஜாக்கருக்கும் இந்தோனேசியாவின் பாலியில் 23 ஆண்டுகளுக்கு முன்பு இந்து முறைப்படி திருமணம் நடந்தது. ஆனால் அது செல்லாது என 1999–ம் ஆண்டில் சர்ச் ஆப் இங்கிலாந்து அறிவித்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மற்றொரு துப்பாக்கிச் சூட்டு சம்பவம்…!!
Next post அம்பாறை:கடலில் மூழ்கி இருவர் பலி..!!