இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார்.

Read Time:1 Minute, 39 Second

SL-sarath_fonseka2.jpgவிடுதலைப் புலிகளின் தற்கொலைப் படைத் தாக்குதலில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார். கடந்த ஏப்ரல் 25ம் தேதி கொழும்பில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் சரத் படுகாயமடைந்தார். ராணுவத் தலைமையகத்திற்கு உள்ளேயே நடந்த இந்தத் தாக்குதல் இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கர்ப்பிணிப் பெண் போல வேடமிட்டு வந்த தற்கொலைப் படை விடுதலைப் புலி, சரத் வந்த கார் மீது பாய்ந்து குண்டை வெடிக்கச் செய்தார். இதில் 11 பேர் கொல்லப்பட்டனர். 25 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஜூன் 26ம் தேதி நடந்த தாக்குதலில் துணை தளபதி பராமி குலோத்துங்கா கொல்லப்பட்டார்.

படுகாயமடைந்த சரத் சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்போது குணமடைந்துள்ள சரத் இன்று மீண்டும் பணியில் சேர்ந்தார்.

அவர் மு¬ழு நலமுடன் இருப்பதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரசாத் சமரசிங்கே தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இஸ்ரேல் தாக்குதலில் 4 ஐ.நா. பார்வையாளர்கள் பலி- இந்திய முகாமும் தரைமட்டம்!
Next post இலங்கை நார்வே தூதரின் புதிய முயற்சி