By 20 December 2007

திருமணமான 3மாதத்தில் 3-வது கணவரை விவாகரத்து செய்யும் நடிகை பமீலா

நடிகை பமீலா தனது 3-வது கணவரை திருமணமான 3 மாதத்தில் விவாகரத்து செய்கிறார். பேவாச் டி.வி புகழ் நடிகை பமீலா ஆண்டர்சன். கவர்ச்சி புயல் என்று வர்ணிக்கப்படும் இந்த நடிகைக்கு 40வயது ஆகிறது. 40 வயது முடிவடைவதற் குள் நடிகை பமீலா 3 திரு மணம் செய்து விட்டார். 3-வது கணவர் பெயர் ரிக் சாலமன். இவரை பமீலா திருமணம் செய்து 3மாதங்கள் கூட ஆகவில்லை. அதற்குள் திருமண வாழ்க்கை பமீலா வுக்கு அலுத்து விட்டது. இதனால் தனது 3-வது கணவரை விவாகரத்து செய்ய பமீலா முடிவு செய்து இருக்கிறார். விவாகரத்து கோரி அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் கோர்ட்டில் பமீலா மனு தாக்கல் செய்திருக்கிறார். 3-வது திருமணம் கடந்த அக்டோபர் மாதம் 6-ந்தேதி தடபுடலாக நடந்தது. இனி 4-வது திருமணம் எப்போது என்பது தான் தெரிய வில்லை.



Comments are closed.