சீனாவில் மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய ஆசிரியையைக்கு மரணதண்டனை
Read Time:1 Minute, 3 Second
தன்னிடம் படிக்கும் மாணவிகள் 23 பேரை விபசாரத்தில் ஈடுபடுத்திய ஒரு ஆசிரியையைக்கும், அவர் கணவருக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டது. இந்த சம்பவம் சீனாவில் நடந்தது. கய்ஷு மாநிலத்தைச்சேர்ந்தவர் ஜாவோ குயிங்மேய். பள்ளிக்கூட ஆசிரியையாக இருக்கிறார். அவரும், அவர் கணவரும் சேர்ந்து மாணவிகளை விபசாரத்தில் தள்ளிவிட்டனர். குயிங்மேய், தன் வகுப்பைச்சேர்ந்த 23 மாணவிகளை கட்டாயப்படுத்தி, நிலக்கரி சுரங்க அதிபர்களுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள செய்தார். அவர்களில் 6 பேர் 14 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கில் அவர்கள் இருவருக்கும் கோர்ட்டு மரணதண்டனை விதித்தது.