அமெரிக்காவின் முதல் பெண்மணி என்ற தகுதியை நான்சி ரீகன் நிலைநாட்டினார்: ஒபாமா இரங்கல்…!!

Read Time:4 Minute, 24 Second

c6357f1c-de75-44c8-8ae7-a6e29d7e8927_S_secvpfபிரபல ஹாலிவுட் நடிகரும், அமெரிக்க முன்னாள் அதிபருமான ரொனால்ட் ரீகனின் மனைவி நான்சி ரீகன்(94) லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நேற்று காலமானார். அவருக்கு வயது 94.

அமெரிக்காவின் 40-வது அதிபராக 1981-89 ஆண்டுகளுக்கிடையே ரொனால்ட் ரீகன் பதவிவகித்தபோது அமெரிக்காவின் மதிப்புக்குரிய முதல் பெண்மணியாக வலம்வந்த நான்சி, சமீபகாலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2004-ம் ஆண்டு மரணமடைந்த ரொனால்ட் ரீகனின் கல்லறை அமைந்திருக்கும் சிமி வேல்லியில் உள்ள ரொனால்ட் ரீகன் நூலக வளாகத்தில் நான்சியின் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது. நான்சி ரீகனும் 1950-60-களில் நான்சி டேவிஸ் என்ற பெயரில் சில ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அறிவாற்றல் இழப்பு (அல்சைமர்) நோயால் கணவர் ரீகன் இறந்தபின்னர் இந்த நோய் தொடர்பான விழிப்புணர்வை உலக மக்களிடையே ஏற்படுத்தும் விதமாக தீவிர பிரசாரம் மேற்கொண்டுவந்த நான்சி, இதுதொடர்பான பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கும் உதவி செய்து வந்தார்.

நான்சியின் மறைவுக்கு அமெரிக்காவின் தற்போதைய அதிபரான பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவியான மிச்சேல் ஒபாமா ஆகியோர் இரங்கல் தெரிவித்து அனுதாப செய்தி வெளியிட்டுள்ளனர்.

‘அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ இல்லமான வெள்ளை மாளிகையில் வாழ்வதற்கு நம்மை தயார்படுத்தக்கூடிய ஆசானாக எதுவுமில்லை என நான்சி முன்னர் குறிப்பிட்டிருந்தார். ஆனால், நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். வெள்ளை மாளிகையில் நான்சி ரீகன் வாழ்ந்துச் சென்ற முன்னுதாரணமான வழிமுறையை நாங்கள் பின்பற்றியதால் எங்களுக்கு வெள்ளை மாளிகை வாழ்க்கை சிரமமின்றி அமைந்தது.

முதல் பெண்மணி என்ற தகுதியை அவரது முந்தைய அறிவுரைக்கு இந்த வேளையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

அமெரிக்க மக்களின் மரியாதைக்குரிய நாட்டின் முதல் பெண்மணியாக அவர் இங்கு வாழ்ந்தபோதும், முன்னாள் அதிபர் ரீகனுடன் வெள்ளை மாளிகையில் இருந்து அவர் பிரியாவிடை பெற்றபோதும் எங்களுக்கெல்லாம் பெருமைக்குரிய மிகப்பெரிய முன்னுதாரணமாக நான்சி இருந்தார். நாட்டின் முதல் பெண்மணி என்ற தகுதியை அவர் நிலைநாட்டிச் சென்றார்.

அல்சைமர் நோய்க்கு எதிராக அவர் ஆற்றிவந்த பிரசாரமும், போராட்டமும் பல்வேறு நோயாளிகளை குணப்படுத்துவதிலும், பலரது உயிர்களை பாதுகாப்பதிலும் உறுதுணையாக இருந்துள்ளது.

மீண்டும் தனது கணவருடன் சேர்ந்து வாழ்வதற்காக நம்மை எல்லாம் பிரிந்துச் சென்ற நான்சி ரீகனின் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தாருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்’ என தங்களது இரங்கல் செய்தியில் ஒபாமா தம்பதியர் தெரிவித்துள்ளனர்.

(இங்குள்ள படத்தில் மறைந்த நான்சி ரீகன் அதிபர் ஒபாமாவுடன் காணப்படுகிறார்.)

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தந்திரமாக வீட்டுக்குள் புகுந்து கொள்ளையிட முயன்ற பெண்..!!
Next post தர்பூசணி ஜூஸில் மிளகுத் தூள் சேர்த்து குடிப்பதால் பெறும் நன்மைகள்..!!