அமெரிக்க முன்னாள் அதிபரின் மனைவி காலமானார்…!!

Read Time:1 Minute, 17 Second

1616b209-0aaa-4c27-a494-84f3b6eae4a7_S_secvpfபிரபல ஹாலிவுட் நடிகரும், அமெரிக்க முன்னாள் அதிபருமான ரொனால்ட் ரீகனின் மனைவி நான்சி ரீகன்(94) லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நேற்று காலமானார். அவருக்கு வயது 94.

அமெரிக்காவின் 40-வது அதிபராக 1981-89 ஆண்டுகளுக்கிடையே ரொனால்ட் ரீகன் பதவிவகித்தபோது அமெரிக்காவின் மதிப்புக்குரிய முதல் பெண்மணியாக வலம்வந்த நான்சி, சமீபகாலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2004-ம் ஆண்டு மரணமடைந்த ரொனால்ட் ரீகனின் கல்லறை அமைந்திருக்கும் சிமி வேல்லியில் உள்ள ரொனால்ட் ரீகன் நூலக வளாகத்தில் நான்சியின் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது. நான்சி ரீகனும் 1950-60-களில் நான்சி டேவிஸ் என்ற பெயரில் சில ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஊழல் வழக்கில் ஈரான் கோடீசுவரருக்கு மரண தண்டனை..!!
Next post செல்போன் கடையில் திருடிய என்ஜினீயரிங் பட்டதாரி கைது…!!