செக்ஸ் வீடியோ வெளியானதால் எனது வாழ்க்கையே தடம்புரண்டு விட்டது: அமெரிக்க கோர்ட்டில் ஹல்க் ஹோகன் புலம்பல்…!!

Read Time:2 Minute, 11 Second

21361cb1-9319-406f-b723-1363530aacac_S_secvpfதொலைக்காட்சிகளில் மிகப் பிரபலமான நிகழ்ச்சியாக கருதப்படும் ’WWE’ மல்யுத்தப் போட்டிகளில் முன்னர் ஜாம்பவானாக விளங்கிவந்த ஹல்க் ஹோகனின் அந்தரங்க வீடியோ கடந்த 2012-ம் ஆண்டு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது 62 வயதாகும் ஹல்க், தனது நெருங்கிய நண்பரின் மனைவியுடன் படுக்கையில் களியாட்டம் போட்ட காட்சிகள் கொண்ட வீடியோவை அமெரிக்காவின் பிரபல இணையதளம் வெளியிட்டது. இந்த வீடியோவால் தனது கவுரவம் பாதிக்கப்பட்டதாகவும், தனக்கு ஏற்பட்ட மானநஷ்ட இழப்பீட்டு தொகையாக பத்து கோடி டாலர்களை அந்த இணையதளம் வழங்க வேண்டும் என்றும் புளோரிடா மாநிலத்தின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள கோர்ட்டில் ஹல்க் ஹோகன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இவ்வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றபோது கோர்ட்டுக்கு வந்திருந்த ஹல்க், தனது அந்தரங்க வீடியோ வெளியானதால் தொழில்ரீதியாக பெரிய இழப்பையும், தனிப்பட்ட முறையில் பெரும் மன உளைச்சலையும் சந்திக்க நேரிட்டதாக தெரிவித்தார்.

ஆரம்பகாலத்தில் வசிக்ககூட வீடின்றி, காரின் நிழலில் படுத்து தூங்கினேன். பின்னர், பிரபலமான பிறகு மிகவும் செல்வாக்கும் பிரபலமுமான நபராக வாழ்ந்து வந்தேன். எனது அந்தரங்கம் தொடர்பான அந்த வீடியோ வெளியானதால் நான் மிகுந்த அவமானத்துக்கு ஆளானேன். எனது வாழ்க்கையே தடம்புரண்டு விட்டது என செய்தியாளர்களுக்கு ஹல்க் பேட்டியளித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவி என்னை விட்டு பிரிந்தால் விமானத்தை மோத விட்டு பயணிகளை கொல்வேன்: விமானி மிரட்டல்..!!
Next post ஆஸ்திரேலியாவில் உயிருடன் எலியை சாப்பிடும் வாலிபர்…!!