திருச்செங்கோட்டில் மாணவன் சாவு: பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்டு…!!

Read Time:4 Minute, 32 Second

411216cf-6303-4a37-a2e3-3e9c00c046b4_S_secvpfநாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே கோழிக்கால்நத்தம் கொல்லம்பாளையத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி பழனிச்சாமியின் மகன் சூர்யா (வயது 10).

இவன் கோழிக்கால்நத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 4–ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 29–ந் தேதி பள்ளியில் ‘ஜாமன்ட்ரி பாக்ஸ்’ காணாமல் போனது தொடர்பாக சூர்யாவுக்கும், சக மாணவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட போது அவர்கள் சூர்யாவை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த 2 மாணவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சூர்யா சிகிச்சை பலனின்றி இறந்தான்.

இதையடுத்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தினர். இதற்கிடையில் சூர்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு பிணத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சூர்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நாமக்கல் மாவட்ட கலெக்டர் தட்சிணாமூர்த்தியை சந்தித்து மனு கொடுத்தனர்.

அதில் சூர்யாவின் குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும். கோழிக்கால்நத்தம் தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் இந்திராகாந்தி, உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் ராஜவேல், வெங்கடாசலம், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலக உதவியாளர் தங்கராஜ் உள்ளிட்ட குழுவினர் நேற்கு காலை கோழிக்கால்நத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு வந்தனர்.

அங்கு பயிலும் 26 மாணவ, மாணவிகளிடம் அவர்கள் நடந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் பள்ளியின் தலைமை ஆசிரியை கனகவள்ளி, உதவியாளர் செண்பகம் உள்ளிட்டோரிடமும் சம்பவத்தன்று நடந்தது என்ன என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியை கனகவள்ளி, பள்ளியில் நடந்த சம்பவத்தை உடனடியாக பள்ளிக்கல்வித் துறை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்காத காரணத்தாலும், மாணவர்களை அவர் கண்காணிக்க தவறியதாலும் அவரை ‘சஸ்பெண்டு’ செய்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் இந்திராகாந்தி உத்தரவிட்டார்.

இதற்கிடையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட மாணவர்கள் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டு சேலத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மாணவனின் குடும்பத்துக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ரூ.2 லட்சத்து 81 ஆயிரத்து 500 நிவாரண உதவித்தொகையும் வழங்கப்பட்டது.

முன்னதாக மாணவனின் உறவினர்கள் 2–வது நாளாக நேற்றும் மாணவனின் பிணத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. பின்னர் போலீசாரின் சமரசத்தை தொடர்ந்து நேற்றிரவு மாணவனின் உடலை உறவினர்கள் வாங்கிச்சென்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சேலம் அருகே வெடிச்சத்தம்: வீட்டுச் சுவர்களில் விரிசல்– ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தது- பொதுமக்கள் பீதி…!!
Next post ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய 7 விஷயங்கள்…!!