வடக்கு, கிழக்கில் பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பு..!!
நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டு 14 மாதங்கள் கடந்துள்ள நிலையில் வடக்கு கிழக்கில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக நீதிக்கான பயணக் குழுவின் சட்ட ஆலோசகர் டொமினிக் தெரிவித்தார்.
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
வவுனியாவில் மாணவி ஹரிஷ்ணவியின் படுகொலையைத் தொடர்ந்து, இன்னும் பல பாலியல் பலாத்கார சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இது குறித்து விசாரணைகள் இடம்பெறுவதில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை,வடக்கு கிழக்கில் அதிகரித்துள்ள துஷ்பிரயோக சம்பவங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்ட போதிலும் அது இன்னும் நிலுவையிலேயே உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.