By 21 December 2007

அரபாத்தின் முன்னைநாள் காதலி மதிவதனி பிரபாகரன் பதுங்குகுழியில் இருந்து மெல்ல மெல்ல தலைகாட்டுகிறார்…

anigirl10.GIFlttepiraba-mrs-01.JPGமதிவதனி எம்மக்களை ஏமாற்றக் புறப்பட்டிருக்கும் விதம் பார்வைக்கு மிகவும் பரிதாபமாக இருந்தாலும் அவற்றின் வக்கிரத் தன்மையை கூறித் தான் ஆக வேண்டும். வாழத் துடிக்கும் பச்சிளம் பாலகர்களை யுத்த முனையில் பலிக் கடாக்களாக்கி கொண்டு எதிர்காலத்தில் சிசுக்களை சுமக்க வேண்டிய கன்னிகளின் வயிற்றில் பயங்கர வெடிகுண்டுகளை சுமக்க வைத்து அவர்களை வெடித்து சிதற வைக்கும் அரக்கனுக்கு துணைநின்று கொண்டு எம்மக்கள் பணத்தில் உல்லாச வாழ்வு நடாத்தும் மதிவதனி மக்கள் முன் தோன்றும் போது எதுவும் அறியா அப்பாவித் தோற்றத்தில் உடம்பில் எவ்வித ஆபரணங்களும் இல்லாமல் தோன்றியிருப்பதானது மீண்டும் ஒருமுறை எம்மக்களின் காதில் காத்திகை பூ சுற்றுவதற்கேயாகும். இங்கு குறிப்பிட வேண்டிய விடயம் யாதெனில் புலிப்பினாமி ஊடகங்களில் பிரசுரமாகியிருக்கும் புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கும் இவர் எவ்வித ஆபரணங்களும் இல்லாத கையை மக்கள் பார்வைக்கு நன்றாக தெர்யும்படி காட்டி நிற்கின்றார் ஆனால் அங்கே அவர் நகைகளை கழட்டி வைத்து விட்டு வந்திருக்கும் தடம் வெளிப்படையாகவே தெரிகிறது. இதன் மூலம் இவர் ஓர் எளிமையான வாழ்க்கையே வாழ்கின்றார் என எம் மக்களுக்கு காட்ட முனைந்தாலும் அவர் வாழும் விதம் எவ்வாறானதென்பதை எம் மக்கள் நன்கறிவர்….

அரபாத்தின் முன்னைநாள் காதலி மதிவதனி பிரபாகரன் பதுங்குகுழியில் இருந்து மெல்ல மெல்ல தலைகாட்டுகிறார்…

புலிகளியக்கம் ஆட்டம் கண்டுள்ள நிலையில் அதன் தலைமையைத் தேடி அழிப்பதே எமது இலக்கு என அரசாங்கம் கங்கணம் கட்டி நிற்பதோடு இவ்வருடமே புலிகளியக்க தலைவர் பிரபாகரனின் இறுதிப் பிறந்தநாள் கொண்டாட்டமாக அமையப் போகிறது என சிறிலங்கா பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோட்டாபாய ராஐபக்ஸ மிகவும் உறுதியாக கூறியுள்ளார். இது இன்று ஓர் முக்கிய பதிவாகவே கணிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் இருந்த இராணுவக் கட்டமைப்புகளை விட இப்போது அமைக்கப்பட்டுள்ள இராணுவ உட் கட்டமைப்பானது மிகவும் செயல்திறன் மிக்கதாக காணப்படுவதும் அவை நேரடியாக அதன் உயர் தலைமைகளால் வழிநடத்தப்பட்டு வருவதும் யாவரும் அறிந்து விடயம்.

கடந்த மாதம் புலிகளியக்கத் தலைவர் பிரபாகரன் இருதடவைகள் மயிரிழையில் உயிர்தப்பியமையும் அத்துடன் சிறுகாயங்களக்கு உட்பட்டமையும் மறைக்க முடியாத உண்மைகளாகும. இது புலிகளியக்க உறுப்பினர்களை உளாிதியாக பெரிதும் பாதிப்படைய செய்யும் என்பதால் புலிகள் மூடி மறைக்க முற்பட்ட போதிலும் வன்னித்தகவல்கள் ஊடாக அவை ஊடகங்களில் கசிந்துள்ளது.

இத்தருணத்தில் பிரபாகரன் மிகவும் மன உழைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிய வருகின்றது. பிரபாகரன் இன்று எமது உரிமைப் போராட்டத்தைத் திசை திருப்பி தனது நலனுக்காக ஏறத்தாழ ஓரு லட்சம் உயிர்களை பலிகொடுத்து தனது வாழ்வை நிலைநிறுத்த முற்பட்டிருந்தான். அவனது அதிகார மோகம் எம்தேச விடுதலைக்காக போராட புறப்பட்ட எமது உத்தம புத்திரர்களை காவு கொண்டு எமது சமூதாயத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்ட புத்தி ஐPவிகளை கொன்று குவித்து எம் பசுமையான பூமியை மயான வெளியாக்கியுள்ளது.

பிரபாகரனிடம் இன்று தோன்றியுள்ள மனச்சஞ்சலமானது எமது மக்கள் சார்ந்த பிரச்சினையையோ அன்றி தற்கால யுத்தம் சம்பந்தமானதோ இல்லை. பிரபாகரன் முன் இன்று நிற்கின்ற முக்கியமான பிரச்சினை யாதெனில் தனது வாழ் நாட்கள் முடியும் தறுவாய்க்கு வந்துள்ளது என்பதும் இத்தனை காலங்களும் தமிழ்மக்களின் இரத்தத்தை கடைந்தெடுத்து சேர்த்து வைத்த சொத்துக்களுக்கு என்னவாகும் என்பதும் தான் கண்மூடினால் இவ்வளவு சொத்துக்களையும் தனது மனைவி பிள்ளைகளால் அனுபவிக்க அல்லது கட்டிக்காக்க முடியுமா? என்பதுவேயாகும்.

இதன்பொருட்டு பிரபாகரன் இப்போது தனது மனைவி மதிவதனியை தமிழ் மக்களிடத்து பிரபல்யம் அடைய செய்யத் தொடங்கியுள்ளான். மதிவதனி பிரபல்யம் தேடுவதற்காக பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ளச் செல்லும் போது புலிகளியக்கத்திலிருந்து இறந்த உறுப்பினர்களின் மனைவிமாரையும் கூடவே கொண்டு சென்று எமது மக்களின் அனுதாபத்தையும் தேடிக்கொள்ள முற்பட்டு வருகின்றார். கூடவே எம்மக்களின் பணத்தில் யுத்தத்திற்காக ஆயுத தளபாடங்களை இறக்குகின்றோம் என கூறிக்கொண்டு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விலை உயர் தளபாடங்களுடனும் அதி நவீன தொழில் நுட்பங்களுடனும் கூடிய வாழ்க்கையை நடாத்தி கொண்டு எமது வாழ வேண்டிய பிஞ்சு குழந்தைகளை அழித்து தனது இரண்டு பிள்ளைகளையும் படிப்பித்து ஓர் நல்ல இடத்திற்கு கொண்டு வந்து விட்டு விட்டு தனது கணவன் இறந்தாலும் சொத்துகளுக்கு சொந்தம் கொண்டாட வேண்டும் என்பதற்காக எம்மக்களை ஏமாற்ற புதிதாக புறப்பட்டிருப்பவர் தான் அரபாத்தின் அன்புக்காதலி மதிவதனி.

இவர் எம்மக்களை ஏமாற்றக் புறப்பட்டிருக்கும் விதம் பார்வைக்கு மிகவும் பரிதாபமாக இருந்தாலும் அவற்றின் வக்கிரத்தன்மையை கூறித்தான் ஆக வேண்டும். வாழத்துடிக்கும் பச்சிளம் பாலகர்களை யுத்தமுனையில் பலிக்கடாக்களாக்கி கொண்டு எதிர்காலத்தில் சிசுக்களை சுமக்க வேண்டிய கன்னிகளின் வயிற்றில் பயங்கர வெடிகுண்டுகளை சுமக்க வைத்து அவர்களை வெடித்து சிதற வைக்கும் அரக்கனுக்கு துணைநின்று கொண்டு எம்மக்கள் பணத்தில் உல்லாச வாழ்வு நடாத்தும் மதிவதனி மக்கள் முன் தோன்றும் போது எதுவும் அறியா அப்பாவித் தோற்றத்தில் உடம்பில் எவ்வித ஆபரணங்களும் இல்லாமல் தோன்றியிருப்பதானது மீண்டும் ஒருமுறை எம்மக்களின் காதில் காத்திகை பூ சுற்றுவதற்கேயாகும்.

இங்கு குறிப்பிட வேண்டிய விடயம் யாதெனில் புலிப்பினாமி ஊடகங்களில் பிரசுரமாகியிருக்கும் புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கும் இவர் எவ்வித ஆபரணங்களும் இல்லாத கையை மக்கள் பார்வைக்கு நன்றாக தெரியும்படி காட்டி நிற்கின்றார் ஆனால் அங்கே அவர் நகைகளை கழட்டி வைத்து விட்டு வந்திருக்கும் தடம் வெளிப்படையாகவே தெரிகிறது. இதன் மூலம் இவர் ஓர் எளிமையான வாழ்க்கையே வாழ்கின்றார் என எம் மக்களுக்கு காட்ட முனைந்தாலும் அவர் வாழும் விதம் எவ்வாறானதென்பதை எம் மக்கள் நன்கறிவர்.

–அதிரடிக்காக பீமன்..

lttepiraba-mrs-01.JPG

THANKS…. WWW.ATHIRADY.COMComments are closed.