9 ஆசனங்கள் கொண்ட வேனுக்குள் 33 சிறார்கள்..!!
சீனாவில் சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்றை நிறுத்தி சோதனையிட்ட போக்குவரத்து பொலிஸார், 9 ஆசனங்கள் மாத்திரம் கொண்ட அந்த வேனில் 33 சிறார்கள் அடைக்கப் பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சீனாவின் கிழக்குப் பிராந்தியத்திலுள்ள அன்ஹுயி மாகாணத்தின் ஹுவோகியு நகரிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதையடுத்து, மேற்படி வேனின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந் நபர் பாடசாலைக்குச் சிறார்களை ஏற்றிச்செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் எனக் கருதப்படுகிறது.
இந் நபர் சாரதி அனுமதிப்பத்திரத்தை வைத்திருந்த போதிலும் போக்குவரத்து சேவைகளை நடத்துவதற்கான அனுமதிப்பத்திரம் எதுவும் இருக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.