விபத்தில் 09 வயது சிறுவன் உயிரிழப்பு…!!
கலேவல, கெகிராவ வீதியில், பல்பெந்தியாவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 09 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
முச்சக்கர வண்டி ஒன்றும் எதிரே வந்த சிறிய ரக லொறி ஒன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூன்று சிறுவர்கள் படுகாயமடைந்து ஆதியாகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் காயமடைந்த சிறுவர்களுள் ஒருவரை மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் தேவகுவ பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவனே உயிரிழந்துள்ளான்.