குருநாகல்:விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!!
குருநாகல், கொக்கரல்ல பொலிஸ் பிரிவில் இன்று (12) சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவர் மரணித்துள்ளதாக கொக்கரல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வேன் குருநாகல், கொக்கரல்ல பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் மட்டக்களப்பு காங்கேயனோடையை பிறப்பிடமாகவும் காத்தான்குடியை வசிப்பிடமாகவும் கொண்ட முஹம்மத் பஷீர் வயது 55 மரணமடைந்துள்ளார்.
காத்தான்குடியில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் கொழும்பு நோக்கி பயணித்த வேன் குருநாகல் கொக்கரல்ல பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருக்கும் போது வீதியை விட்டு விலகி மின்கம்பத்துடன் மோதியதிலேயே விபத்துச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் வாகனத்தில் சென்ற இன்னும் சிலர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலதிக விசாரணைகளை கொக்கரல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்படத்தக்கது.