உலக தலைவர்களின் வரிசையில் பிரதமர் மோடிக்கு லண்டனில் மெழுகுச் சிலை…!!

Read Time:2 Minute, 2 Second

4cf549bd-d701-4254-8f83-0ccd289b70e4_S_secvpfலண்டனில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் உள்ள பிரபல உலக தலைவர்களின் மெழுகுச்சிலைகள் வரிசையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மெழுகு சிலையும் இடம்பிடிக்க உள்ளது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள உலகப் புகழ்பெற்ற மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் பராக் ஒபாமா, இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், மறைந்த தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் மண்டேலா உள்ளிட்ட பல முக்கிய உலக தலைவர்களின் சிலைகள் இடம்பெற்றுள்ளன.

மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மோடியின் மெழுகுச் சிலை இடம்பெறுவது குறித்து அருங்காட்சியகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் “ பிரதமர் மோடி உலக அரசியலில் முக்கிய இடம் வகிக்கிறார். 2015-ம் ஆண்டில் டைம் இதழ் வெளியிட்ட டாப்-100 மனிதர்களில் மோடி முதல் 10 இடத்திற்குள் வந்துள்ளார். மோடியின் மெழுகுச் சிலை கிரீம் வண்ண குர்தாவுடன் கோட் அணிந்தபடி வடிவமைக்கப்பட்டு வருகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர், ஹாங்காங், பாங்காக் உள்ளிட்ட நகரங்களில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தின் கிளைகளிலும் மோடியின் சிலை இடம்பெறவுள்ளது.

பிரதமர் மோடியின் மெழுகுச் சிலை ஏப்ரல் மாதம் திறக்கப்படவுள்ளது. சிலை வடிவமைப்பு கலைஞர்கள் டெல்லி வந்து பிரதமர் மோடியை அளவெடுத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஊனைமாஞ்சேரியில் கல் உடைக்கும் எந்திர பெல்ட்டில் சிக்கி சிறுவன் பலி..!!
Next post மாணவியுடன் பாலியல் உறவு: இங்கிலாந்து கால்பந்து வீரரை பிரிந்து சென்ற காதலி…!!