அமெரிக்காவில் துணை ஜனாதிபதி அலுவலகத்தில் தீ விபத்து ஆயிரம் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்

Read Time:2 Minute, 21 Second

அமெரிக்க துணை ஜனாதிபதி டிக் செனியின் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அலுவலகம் சேதம் அடைந்தது. அங்கு பணியாற்றிய ஆயிரம் ஊழியர்கள் உடனடியாக அங்கு இருந்து வெளியேற்றப்பட்டனர். புஷ் உடன் இருந்தார் அமெரிக்காவில் துணை ஜனாதிபதியாக டிக் செனி இருந்து வருகிறார். அவரது அலுவலகம் வெள்ளை மாளிகை வளாகத்துக்குள் ஜனாதிபதி தங்கி இருக்கும் இடத்துக்கு எதிரே உள்ளது. ஜனாதிபதி மாளிகை வெள்ளை மாளிகை என்று அழைக்கப்படுவது போல, துணை ஜனாதிபதியின் அலுவலகம் ஐசனோவர் செயல் அலுவலக கட்டிடம் என்று அழைக்கப்படுகிறது. அந்த அலுவலகத்தில் திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் அலுவலகம் சேதம் அடைந்தது. இதனால் அந்த அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஆயிரம் ஊழியர்கள் உடனடியாக அங்கு இருந்து வெளியேற்றப்பட்டனர்.விபத்து நடந்தபோது துணை ஜனாதிபதி டிக் செனி ஜனாதிபதி புஷ் உடன் வெள்ளை மாளிகையில் இருந்தார். காரணம் என்ன? இந்த அலுவலகம் கருங்கல்லால் ஆனது. இந்த கட்டிடத்தின் 2-வது தளத்தில் இருந்து கரும்புகை எழுந்தது. உடனடியாக தீ அணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்துக்கு என்ன காரணம் என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மின்சார கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தீவிரவாதத்துக்கும், இதற்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று அதிகாரிகள் கூறினார்கள். தீ அணைக்கப்பட்டதும் ஜனாதிபதியும், துணை ஜனாதிபதியும் அந்த இடத்துக்கு வந்து தீயை அணைத்த தீ அணைப்பு படையினருக்கு நன்றி தெரிவித்தார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அனிமேசனில் அனில் அம்பானி ரஜினி மகள் நிறுவனத்தில் பங்குதாரராக திட்டம்
Next post வெள்ள நிவாரண பணிகள்: விஜயகாந்த்