புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தினால், புங்குடுதீவில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாடுகள் தொடர்பான பகிரங்க அறிவித்தல்..!!

Read Time:4 Minute, 13 Second

DSC_0015aa
புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தினால், புங்குடுதீவில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாடுகள் தொடர்பான பகிரங்க அறிவித்தல்..!!

சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்களே!

கடந்த 25.10.2015 அன்று சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினால், சுவிஸ் பேர்ன் மாநகரில் நடாத்தப்பட்ட “வேரும் விழுதும்” விழாவின் போது விழாவுக்கென்று விழா ஏற்பாட்டுக் குழுவினால் சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்களிடமிருந்து நிதி சேகரிக்கப்பட்டது.

சேகரிக்கப்பட்ட நிதியிலே மேலதிகமாக உள்ள பணத்தை புங்குடுதீவின் அபிவிருத்திக்கே நாம் பயன்படுத்துவோமென்று கூறியே இந்த நிதி சேகரிக்கப்பட்டது.

இதற்கமைய மேற்படி நிதியில் தற்போதுவரை எம்மிடம் மேலதிகமாக உள்ள பணத்தில் நாம் உடனடியாக புங்குடுதீவு இறுபிட்டி பிரதான வீதியின் காளிகோவில் சந்தியில் அமைந்துள்ள பொதுக்கிணறுக்கு சுற்றுக்கட்டு கட்டி தளம்அமைத்துக் கொடுப்பதுடன், கிணற்றுக்கருகாமையில் கால்நடைகள் நீராகாரம் பருகுவதற்கென்று சிறியதொரு நீர்த்தொட்டியும் அமைத்துக் கொடுப்பதென தீர்மானித்து தற்போது அதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று புங்குடுதீவு கரந்தலி பகுதியிலுள்ள பொதுக்கிணறும் இவ்வாரத்திற்குள் சுற்றுக்கட்டு கட்டி தளம் அமைத்துக் கொடுப்பதென தீர்மானிக்கப்பட்டு தற்போது அதற்கான வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் புங்குடுதீவு மேற்கு அமெரிக்கன் மிசன் வித்தியாலய நிர்வாகம், எம்மிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க அங்கு கல்விபயிலும் மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கான மலசலகூடம் அமைத்துக் கொடுக்கும் வேலைகளும்,

புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க வித்தியாலய நிர்வாகம் எம்மிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க அங்கு உணவுகூடம் அமைத்தல் அதாவது அதனை பார்வையாளர்கள் மண்டபமாகவும் பயன்படுத்தும் வகையிலான உணவுகூடம் அமைக்கும் வேலைகளும்..
சுவிஸ் ஒன்றியத்தினால் மேற்கொள்ளப் பட்டுள்ளதென்பதை இத்தால் மூலம் அனைவருக்கும் அறியத் தருகின்றோம்.

இவ் அறிவித்தலை இப்போது நாம் உடனடியாகவே தெரிவிப்பதற்கான காரணம் யாதெனில், இம்மாத நிறைவிற்குள் (28.03.2016) ஒன்றியத்தின் நிர்வாக, பொதுச்சபை கூடவுள்ளதால் தயவுசெய்து “வேரும் விழுதும்” விழாவின் போது நிதி வழங்குவதாக எழுதி இதுவரையில் பணம் தராதோர் மற்றும் விளம்பரம் தந்து அதற்கு இதுவரையில் பணம் தராதவர்கள் தயவுசெய்து அந்த பணத்தினை நிர்வாக உறுப்பினர்களிடமோ, விழா ஏற்பாட்டுக் குழுவிடமோ உடன் ஒப்படைத்து எமது செயற்பாட்டிற்கு உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளுகின்றோம்.

நன்றி.
இவ்வண்ணம்,

த.தங்கராஜா,
செயலாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்,
சுவிஸ்லாந்து.
21.03.2016.

DSC_0015

DSC_0016

DSC_0017

DSC_0052

DSC_0054

DSC_0055

DSC_0059

DSC_0060

DSC_0061

DSC_0073

DSC_0074

DSC_0079

DSC_0082

DSC_0090

DSC_0091

DSC_0092

DSC_0100

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தொப்புள்கொடியுடன் குப்பைத்தொட்டியில் கிடந்த அனாதை குழந்தையை காப்பாற்றிய தெருநாய்…!!
Next post சுவிஸ் ஒன்றியத்தினால், புங்குடுதீவு வல்லன், வீராமலை மாணவ, மாணவியருக்கான பிரயாண ஒழுங்குகள்..! (VIDEO & PHOTOS)