ஜப்பான் விசேட நிபுணர்களின் அறிக்கை இரண்டு தினங்களில்..!!

Read Time:2 Minute, 16 Second

timthumb (4)தீப்பற்றி எரிந்த மின்மாற்றிகள் தொடர்பில் ஜப்பான் நாட்டு விசேட நிபுணர்களின் அறிக்கை 2 தினங்களில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க அமைச்சு தெரிவிக்கின்றது. எரிந்த இரண்டு மின் மாற்றிகளையும், பியகம, மற்றும் கொடுகொட, ஓபாத ஆகிய பகுதிகளில் உள்ள உப மின்உற்பத்தி நிலையங்களையும் ஜப்பான் நாட்டு விசேட நிபுணர்கள் சிலர் நேற்று பார்வையிட்டனர்.

இதேவேளை பியகம மற்றும் கொடுகொட உபமின்உற்பத்தி நிலையங்களின் கண்காணிப்பிற்கு ஜே​ர்மன் நாட்டின் 2 விசேட நிபுணர்கள் இன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க அமைச்சர் ரஞ்சித் சியபலாபிடிய தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த வாரத்தில் மின்சாரம் தடைப்பட்டமை தொடர்பிலான அறிக்கையை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் இறுதி பரிசீலனை நடவடிக்கைகள் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளதாக பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா கூறியுள்ளார்.

இந்நிலையில் பியகம உபமின் உற்பத்தி நிலையத்தில் செயலிழந்த மின்மாற்றிக்கு பதிலாக புதிய மின் மாற்றியொன்றை பொருத்தும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக ஒப்பந்தங்கள் நிறைவுபெற்ற புத்தளம், எம்பிலிப்பிட்டிய, ஹொரணை
போன்ற மின்உற்பத்தி நிலையங்களிலிருந்து மீண்டும்​ பெறுவதற்கு உத்தேசித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரான்ஸில் புலிகள் இயக்கப் பிரிவினரிடையே மீண்டும் மோதல்!: ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி…!!
Next post பெண் சுட்டுக் கொலை – மேலும் இருவர் கைது…!!