ரஜீவ்காந்தியைக் கொன்ற புலிகளை தூக்கில் இடாதிருப்பதேன்?: இந்திய மத்திய அரசிடம் ஜெயலலிதா கேள்வி

Read Time:4 Minute, 20 Second

jayalalitha.jpgஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ்காந்தியை படுகொலை செய்த புலிகளை இன்றுவரை தூக்கில் இடாமல் மத்திய அரசு மெத்தனப் போக்கை கடைபிடிப்பதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தீவிரவாத மற்றும் பயங்கரவாத சக்திகள் தமிழ் நாட்டிற்குள் சுதந்திரமாக நடமாடுவதோடு மட்டுமல்லாமல், கூட்டணிக்குள்ளும் நடமாடிக் கொண்டிருக்கின்றன என்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அண்மையில் வழங்கியுள்ள பேட்டியே சிறந்த சான்றாகும். உண்மை நிலையை புரிந்துகொள்ளாமல் மனம் போன போக்கில் சட்ட விரோதமான செயலில் திருமாவளவன் ஈடுபடுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்த ஆண்டு, அதாவது 2007-ல் விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்படவில்லை என்று திருமாவளவன் வேடிக்கையான ஒரு கருத்தை சொல்லியிருக்கிறார். அதனால் தற்போது தடை ஏதுமில்லை என்று வாதாடியிருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தின் மீதான தடையை மத்திய அரசு நீடிக்கும். ஆகவே, தற்போதும் விடுதலைப்புலிகள் இயக்கம் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கம் தான். இந்த உண்மையை புரிந்துகொள்ளாமல் இந்த ஆண்டு எல்.ரீ.ரீ.ஈ. இயக்கம் தடை செய்யப்படவில்லை என்று கூறி திருமாவளவன் புலிகளுக்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்து பேசியிருப்பது தமிழ் நாட்டிற்கு மட்டுமல்லாது, இந்தியாவிற்கே பேராபத்தை ஏற்படுத்தக் கூடிய தண்டனைக்குரிய செயலாகும்.

ரஜீவ்காந்தியை கொன்றவர்களுக்கு கொடுக்கப்பட்ட மரண தண்டனையை உச்சநீதிமன்றம் 1999-ல் உறுதி செய்த பிறகு எட்டு ஆண்டுகள் ஆகியும் அது இன்னும் நிறைவேற்றப்படவில்லை. கருணை மனு என்கிற பெயரில் யாருடைய இலாக்காவில் அந்த கோப்பு தூங்கிக் கொண்டிருக்கிறது? அப்படியே அந்தக் கோப்பு கிடப்பில் போடப்பட்டாலும் காங்கிரஸ் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய உள்துறை அதனை வெளிச்சத்துக்குக் கொண்டுவர வேண்டாமா? எதற்காக மவுனம்? ஏன் மவுனம்?

ரஜீவ்காந்தியை மிகக் கோரமான முறையில் படுகொலை செய்தவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்றுவதில் சோனியா காந்திக்கு அக்கறை இல்லையா? காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி அரசுக்கு இதில் விருப்பம் இல்லையா? ஏன்?

தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரிப்பவர்கள் மீது மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால், காஷ்மீர், பஞ்சாப், அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தற்போது தலைவிரித்தாடும் தீவிரவாதச் செயல்கள் மென்மேலும் அதிகரித்து, இந்திய இறையாண்மைக்கே பங்கம் விளைவிக்கக் கூடிய பேராபத்தாக மாறிவிடும் என்பதை மத்திய அரசுக்கு ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கூற விரும்புகிறேன் என்றும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அரபாத்தின் முன்னைநாள் காதலி மதிவதனி பிரபாகரன் பதுங்குகுழியில் இருந்து மெல்ல மெல்ல தலைகாட்டுகிறார்…
Next post இந்திய சிறைகளில் தூக்கு தண்டனைக்காக 1,150 பேர் காத்திருப்பு