தொடர்ச்சியாக 92 மணித்தியாலங்கள் T V பார்த்து புதிய கின்னஸ் சாதனை படைத்த ஆஸ்திரிய இளையோர்…!!

Read Time:3 Minute, 25 Second

gfhghஆஸ்திரியாவைச் சேர்ந்த ஐவர் தொடர்ச்சியாக 92 மணித்தியாலங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்து புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.

இடமிருந்து வலமாக: ஜொஹான்னஸ் ஸ்பைகா (19), மார்கஸ் வேல்டேல் (24), ஸிவான் பஜ்கனோவிச் (23), நதீன் பௌஸர் (20), டொமினிக் ஸெல்லர் (24)

19 முதல் 25 வயதான 4 இளைஞர்களும் ஒரு யுவதியுமே இவ்வாறு புதிய சாதனை படைத்துள்ளனர். ஜொஹான்னஸ் ஸ்பைகா (19), மார்கஸ் வேல்டேல் (24), ஸிவான் பஜ்கனோவிச் (23), (நதீன் பௌஸர் (20), டொமினிக் ஸெல்லர் (24) ஆகியோரே தொடர்ச்சியாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்துள்ளனர்.

சுமார் 60 கால்பந்தாட்டப் போட்டிகளை நடத்துவதற்குப் போதுமான நேரம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. சராசரியாக ஆஸ்திரியர்கள் தினமும் தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தை கருத்திற்கொண்டால் 92 மணித்தியாலங்கள் தொலைக்காட்சி பார்ப்பதற்கு அவர்களுக்கு 32 நாட்கள் தேவைப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந் நிகழ்வில், பங்குபற்று வதற்கு சுமார் 400 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந் நிகழ்வுக்கு தெரிவுசெய்யப்பட்டவர்கள் கழிவறை செல்வதற்கு, குளிப்பதற்கு, குட்டித்தூக்கம் போடுவதற்கு என மணித்தியாலத்துக்கு 5 நிமிடங்கள் ஓய்வெடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து விழித்திருந்து தொலைக்காட்சி பார்ப்பதற்காக இவர்கள் சைக்கிள் உடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டும், கோப்பி மற்றும் சக்தியளிக்கும் எனர்ஜி ட்ரிங்ஸ் ரக பானங்களை அருந்திக்கொண்டும் இருந்தனர்.

இறுதிக் கட்டம் அவர்களுக்கு மிகவும் கடினமானதாக இருந்தது என இந் நிகழ்வின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான மொரிட்ஸ் ஆர்னோல்ட் ஏ.எவ்.பியிடம் தெரிவித்துள்ளார்.

இவர்களின் சாதனையை கின்னஸ் உலக சாதனை நூல் வெளியீட்டாளர்கள் அங்கீகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந் நிகழ்வில் பங்குபற்றிய ஒரே யுவதியான நதீன் பௌஸர், மிக அதிகமான நேரம் உறங்கியதன் மூலம் இந்நிகழ்வுக்கு தான் தயாராகியதாகக் கூறினார்.

ஸிவான் பஜ்கனோவிச் எனும் இளைஞர் கூறுகையில், இந்நிகழ்வில் பங்குபற்றுவதை தனது பெற்றோர் ஆட்சேபித்ததாகவும் ஆனால், கின்னஸ் சாதனை நூலில் தனது பெயர் இடம்பெறவேண்டும் என்பதற்காக தான் இதில் பங்குபற்றியதாகவும் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாதையில் மயக்கி பணபறிக்கும் பாலியல் தொழிலாளிகள்…!!
Next post தந்தையை எரித்துக்கொண்ட மகள்: அதிர்ச்சிகர பின்னணி..!!