By 23 December 2007

நள்ளிரவில் பாதாள அறையில் பெண்களை ஏமாற்றி உல்லாசம் சுருட்டு’ சாமியார் பழனிச்சாமி பற்றி திடுக்கிடும் தகவல்கள்

samy01.jpg3 பெண்களை மணந்து, போலீஸ் விசாரணையில் சிக்கியுள்ள சென்னை, வேளச்சேரி `சுருட்டு` சாமியார் பழனிச்சாமி பற்றி அந்த பகுதி பொதுமக்கள் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார்கள். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை வைத்தனர். சுருட்டு சாமியார் சென்னை வேளச்சேரி விஜயநகர் கைரேலி பகுதியில் வசித்து வருபவர் பழனிச்சாமி (வயது 48). இவர் அந்தப்பகுதியில் `துர்கா அறக்கட்டளை` என்ற பெயரில் ஆசிரமம் வைத்துள்ளார். மதுரை வீரன் சாமி கோவிலையும் ஆசிரமத்துக்குள் கட்டி வைத்துள்ளார். சித்ரா பவுர்ணமி திருவிழாவில் அவர் விலை உயர்ந்த சுருட்டோடு ஊர்வலம் வருவார் என்பதால், அவரை `சுருட்டு சாமியார்` என்று அப்பகுதி மக்கள் அழைக்கிறார்கள். தலையில் உருண்டையான குடுமி வைத்திருப்பதால், `குடுமி சாமியார்` என்றும் அழைப்பார்கள். ஏற்கனவே 2 மனைவிகள் இருக்கும்போது, 3-வதாக பெண் டாக்டரை ஏமாற்றி, திருமணம் செய்துள்ள சாமியார் பழனிச்சாமி மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. அவரைப்பற்றி, திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சாமியார் பழனிச்சாமி `செக்ஸ்’ சாமியார்கள் பிரேமானந்தா, சதுர்வேதி ஆகியோர் வரிசையில் தற்போது இடம் பிடித்துவிட்டார். சென்னை, வேளச்சேரி கைரேலி பகுதிக்கும், புழுதிவாக்கம் ராம்நகர் பகுதிக்கும் நடுவில் அழகான ஏரிகள் புடைசூழ எழில்மிகு தோற்றத்தோடு சாமியார் பழனிச்சாமியின் ஆசிரமம் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது.

ஆசிரமத்தை சுற்றி அழகான மதில்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. அந்த பகுதியில் பழனிச்சாமியின் ஆசிரமம் மட்டும் தனியாக காட்சி அளிக்கிறது. சாமியாருக்கு அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பரம எதிரிகளாக உள்ளனர். அனைவரும் ஒட்டுமொத்தமாக அவரது நடவடிக்கைகளை கொதித்துபோய் குறை சொல்கிறார்கள்.

அ.தி.மு.க. பெண் பிரமுகர்

சாமியார் பழனிச்சாமியின் ஆசிரமத்திற்கு எதிரில் வசிக்கும் அ.தி.மு.க. பிரமுகர் சரஸ்வதி, பழனிச்சாமி பற்றி கூறியதாவது:-

நான் இந்த பகுதியில் நீண்ட நாட்களாக வசிக்கிறேன். 9 ஆண்டுகளுக்கு முன்பு பழனிச்சாமி தற்போது ஆசிரமம் உள்ள இடத்தில் ஒரு சூலத்தை கொண்டு நட்டு அந்த இடத்தில் மதுரைவீரன் சாமி எழுந்தருளியிருப்பதாக கூறினார். முதலில் சூலம் நாட்டிய இடத்தை சுற்றி ஒரு சிறிய குடிசை போன்ற கோவிலை கட்டினார். செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் சாமியார் பூஜைகள் செய்வார். ஆரம்பத்தில் அவரை நல்லவர் என்று நினைத்து எங்கள் பகுதி மக்கள் மிகவும் மரியாதையாக நடத்தினோம். பின்னர் அவர் சூலம் நட்ட இடத்தை சுற்றியுள்ள சுமார் 2 கிரவுண்டு நிலத்தை அப்படியே ஏரிக்கரை ஓரம் வளைத்து போட்டுக்கொண்டார். முதலில் மதுரை வீரன் சாமிக்கு ஒரு சிறிய கோவில் கட்டினார்.

அடுத்து சுற்றி காம்பவுண்டு கட்டி இன்னும் நிறைய சிறிய கோவில்களை கட்டினார். இரவு 11 மணிக்கு மேல்தான் பூஜை ஆரம்பிப்பார். சித்ரா பவுர்ணமி அன்று பெரிய அளவில் திருவிழா கொண்டாடுவார். வேளச்சேரி மெயின்ரோடு அருகே இருக்கும் முத்துமாரியம்மன் கோவிலிருந்து சாமி ஆடியபடி சித்ரா பவுர்ணமி அன்று அவர் ஊர்வலமாக வருவார்.

மதுரைவீரன் வேடம்

அப்போது அவர் மதுரை வீரன் சாமி போல வேடம் அணிந்திருப்பார். தலையில் தொப்பி, மார்பை சுற்றி சங்கிலி, கையில் கொடும்வீச்சரிவாள், வாயில் விலை உயர்ந்த புகை கக்கும் சுருட்டோடு அவர் தெருக்களில் வலம் வருவார். எங்கள் பகுதியில் வசித்த 2 பெண்களை அவர் பில்லி சூனியம் வைத்து மோசடி செய்துவிட்டார். அதன்பிறகு, எங்கள் பகுதி மக்கள் யாரும் அவரிடம் பேசமாட்டோம். அந்த கோவிலுக்கும் போகமாட்டோம்.

பகல் முழுக்க கோவிலில் ஆள் நடமாட்டமே இருக்காது. இரவு 11 மணிக்கு மேல் தான் பூஜை செய்ய ஆரம்பிப்பார். 2003-ம் ஆண்டு தான் சாமியார் துர்கா அறக்கட்டளை என்ற பெயரில் பதிவு செய்து ஆசிரமத்தை தொடங்கினார்.

ஆடு-கோழி பலி

சித்ரா பவுர்ணமி திருவிழாவின்போது கோவிலில் பலி பீடத்தில் ஆடுகளும், கோழிகளும் பலியிடப்படும். பலியிடப்பட்ட ஆடு, கோழிகளை சமைத்து கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அதிகாலையில் விருந்து படைப்பார்கள். கோவிலுக்குள்ளேயே கியாஸ் வசதியுடன் சமையல் அறை உள்ளது. சாமியாரை தரிசிக்க வெளிïர்களிலிருந்து தான் ஏராளமானபேர் வருவார்கள். குறிப்பாக, வசதி படைத்தவர்கள் நிறைய பேர் காரில் வருவார்கள்.

அதிலும், பெண் பக்தர்கள்தான் அதிகளவில் வருவார்கள். பேய் பிடித்திருப்பவர்கள், மனநோயாளிகள், குழந்தை இல்லாதவர்கள், திருமணம் தள்ளிப்போகும் பெண்கள் போன்றவர்கள்தான் சாமியாரை சந்தித்து அதிகளவில் குறி கேட்பார்கள். சாமியார், பெண்களை ஏதோ ஒரு சக்தியால் வசியப்படுத்திவிடுவார்.

தொடையில்

நள்ளிரவு பூஜையின்போது சாமியார் கோவிலில் உள்ள மலர் ஊஞ்சலில் உட்கார்ந்து கொள்வார். சாமி ஆட்டு உச்சக்கட்டத்தில் இருக்கும்போது, குறி கேட்க வந்திருக்கும் 2 பெண்களை அழைத்து தனது தொடைகளில் உட்கார சொல்வார். சில நேரம் பெண்களை மண்டியிட்டு தனது காலடியில் உட்கார சொல்லி இரண்டு தொடைகளையும் பிடித்துவிட சொல்வார். அதையெல்லாம் தெய்வ வாக்காக கருதி பாதிக்கப்பட்ட பெண்கள் செய்வார்கள்.

நாங்கள் இதையெல்லாம் வெளியில் நின்றுகொண்டு வேடிக்கை பார்ப்போம். ஒவ்வொரு நாள் இரவிலும், ஒரு பெண்ணை தன்னோடு தங்க வைத்துக்கொள்வார்.

பாதாள அறையில்

ஆசிரமத்தில் அவர் குறிசொல்லும் ஒரு அறை உள்ளது. அதற்குள் அம்மன் ஆங்காரமாக இருப்பது போன்ற படம் சுவரில் வரையப்பட்டிருக்கும். அதில் இரண்டு ஷோபாக்களும் போடப்பட்டிருக்கும். அதில் உட்கார்ந்துகொண்டுதான் அவர் குறி சொல்வார். அந்த குறி சொல்லும் அறையில் ஒரு ரகசிய பாதாள அறை உள்ளது. 2 பேர் இறங்கி செல்லும் அளவுக்கு அந்த பாதாள அறை அகலமாக இருக்கும். பாதிக்கப்பட்ட பெண்களை அந்த பாதாள அறையில் வைத்துதான் பூஜை செய்வதாக கூறி சாமியார், பலாத்காரம் செய்வார் என்று நாங்கள் கேள்விப்பட்டுள்ளோம்.

அடுத்த நாள் காலையில் பார்த்தால் நள்ளிரவில் பூஜையில் வைக்கப்பட்ட பெண் தலைவிரி கோலமாக அழுது கொண்டிருக்கும் காட்சியை காண முடியும். அந்த பெண்கள் அழும் காட்சி பரிதாபமாக இருக்கும்.

வெளியில் ஓடிவந்த பெண்

கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஒருநாள் வெள்ளிக்கிழமை அன்று நள்ளிரவு ஒரு மணியளவில் அழகிய இளம் பெண் ஒருவர் சாமியாரின் ஆசிரமத்தில் இருந்து தலைவிரி கோலமாக `நான் பைத்தியம் இல்லை’ என்று சொன்னபடி கதறி அழுதபடி தெருவில் ஓடிவந்தார். நாங்கள் அதை வேடிக்கை பார்த்தோம். சாமியார் வெறிபிடித்தவர்போல அந்த பெண்ணை தலைமுடியை பிடித்து இழுத்து ஆசிரமத்திற்குள் கொண்டு சென்றார்.

அந்த பெண்ணின் உறவினர்கள் எல்லாம் அதை வேடிக்கை பார்த்தனர். நாங்கள் அதை தட்டிக்கேட்க முடியாத நிலையில் இருந்தோம். நாங்கள் ஏதாவது தட்டிக்கேட்டால் எங்களை ஒழித்துக்கட்டிவிடுவார் என்று பயந்தோம். இதனால் அவரது கொடுமையான செயல்களை தடுக்க முடியவில்லை. அவரது முதல் மனைவி சந்திரா, சாமியாரின் கொடுமைகளை தட்டிக்கேட்டதால், அவருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்று சொல்லி விரட்டிவிட்டார். சாமியார் தனது குடும்பத்தை ஆசிரமத்திற்குள் வர அனுமதிக்கமாட்டார்.

கடுமையான தண்டனை

சாமியாரை தட்டிக்கேட்க ஆள் இல்லை என்று நினைத்தோம். 2 அரசு அதிகாரிகள், அவருக்கு மிகவும் பக்கபலமாக உள்ளனர். வெளிநாடுகளில் வசிக்கும் சில பணக்காரர்கள் கூட சாமியாரின் தீவிர பக்தர்களாக இருக்கிறார்கள். அவருக்கு மோசடி செய்த சம்பாத்தியத்தில் பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். பெண்களுக்கு கேடு விளைவிக்கும் பழனிச்சாமி சாமியார் மீது போலீசார் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், பெண்களை திரட்டி அனைத்துக்கட்சி சார்பிலும், பெண்கள் அமைப்பு சார்பிலும், சமூக நிறுவனங்கள் சார்பிலும் கடுமையான போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு சரஸ்வதி கூறினார்.

போலீஸ் ஏட்டு குமுறல்

சாமியாரின் ஆசிரமத்திற்கு நேர் எதிரில் வீடு கட்டி குடியிருக்கும் போலீஸ் ஏட்டு ஒருவரும் சாமியாரின் காமலீலைகளை கடுமையாக கண்டித்தார். அவர் கூறியதாவது:-

சாமியார் பழனிச்சாமி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வேளச்சேரியில் சிறிய டீக்கடை வைத்திருந்தார். சைக்கிளில் டீ கேனை கட்டிக்கொண்டு, தெரு தெருவாக சென்று அவர் டீ வியாபாரம் செய்வார். இதை நானே பார்த்துள்ளேன். கடந்த 10 ஆண்டுகளுக்குள் அவர் பெரிய ஆளாகிவிட்டார். ஆரம்பத்தில் என்னை பார்த்தால் ஐயா என்று அழைப்பார். இப்போது நான் தான் அவரை ஐயா என்று அழைக்க வேண்டும்.

அவரை இந்த பகுதி மக்கள் சுருட்டு சாமியார் என்றும், மதுரை வீரன் சாமியார் என்றும், குடுமி சாமியார் என்றும், குறி சொல்லும் சாமியார் என்றும் அழைப்பார்கள். அவரது தலையில் உருண்டையான குடுமி இருக்கும். இரண்டு காதுகளிலும் `வைர கடுக்கன்’ மின்னும். ஆட்டு கடா மீசை வைத்து மிரட்டும் தோற்றத்தில் அவர் காணப்படுவார். சாதாரண ஆளாக இருந்த அவர், இப்போது கோடீசுவரராக ஆகிவிட்டார். சைக்கிளில் வந்த அவர், இப்போது மாருதி சொகுசு காரில் போகிறார். காரில் போகும்போது மோட்டார் சைக்கிளில் பைலட் போல 2 பேர் காவலுக்கு போகிறார்கள்.

மற்றவர்களிடம் எப்படி நடந்துகொண்டாலும், என்னை பொறுத்தமட்டில் சற்று ஒதுங்கியே செல்வார். என்னிடம் எதையும் வைத்துக்கொள்ளமாட்டார். இந்த பகுதியில் அவர் மீது எந்த புகாரும் இல்லை. இதனால், நானும், அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை. ஆனால், வெளிïர்களிலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் அவரை தேடி வருவார்கள். பெண்களிடம் தப்பாக நடந்து கொள்கிறார் என்பது தெரிந்த விஷயம். யாரும் புகார் கொடுக்காததால் இதுவரை அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்போதுதான் முதல் முறையாக சட்டத்தின் முன்பு அவர் நிறுத்தப்பட்டுள்ளார்.

இவ்வாறு போலீஸ் ஏட்டு கூறினார்.

பிரபலம்

வேளச்சேரி மெயின்ரோட்டில் போகும்போதே, சாமியார் பழனிச்சாமியின் ஆசிரமம் எங்கே இருக்கிறது என்று கேட்டால், பொதுமக்களும் குடுமி சாமியாரின் ஆசிரமம் தானே, அதோ அங்கே இருக்கிறது என்று அடையாளம் காட்டுகிறார்கள். குறிப்பாக, பெண்களுக்கு அவரை நன்கு தெரிந்திருக்கிறது. சாமியாருக்கு ஆதரவாக அவர் நல்லவர் என்றும், உண்மையான ஆன்மீகவாதி என்றும் கருத்துசொல்ல பொதுமக்கள் யாரும் முன்வரவில்லை. சாதாரண ஏழை மக்கள் கூட அவர் மீது வெறுப்பை கொட்டியே பேசுகிறார்கள்.

`ஆரம்பத்தில் கறி சாப்பாடு போடுவார். இப்போது எங்களை விரட்டிவிடுவார்’ என்று ஏழை பெண்மணி ஒருவர் வெறுப்போடு கருத்து சொன்னார். அந்த பகுதி மக்கள் அனைவரும் ஒருமித்த குரலில் சாமியார் பழனிச்சாமியை ஜெயிலில் தள்ள வேண்டுமென்று போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

samy01.jpg
samy02.jpg
samy03.jpgComments are closed.