தனியாரின் காணியில் அறநெறி பாடசாலை நடத்த அனுமதி மறுப்பு…!!

Read Time:2 Minute, 20 Second

sdfdfதனியாரின் காணியில் அறநெறி பாடசாலை நடத்த அனுமதி மறுப்பு-

மன்னார் இத்திக்கண்டல் கிராமத்தில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியில் அறநெறி பாடசாலை நடத்துவதற்கு மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எம்.சிறிஸ்கந்தகுமார் அனுமதி மறுத்துள்ளார்.

தனிநபர் ஒருவருக்கு சொந்தமான காணியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டு வரும் அறநெறி பாடசாலை குறித்து, காணியின் உரிமையாளர் மாந்தை மேற்கு பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வந்த நிலையிலே இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காணிப் பிரச்சினை குறித்து மாந்தை மேற்கு பிரதேச செயலாளர், அடம்பன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாலப்பெருமாள் கட்டு கிராம அலுவலகர் பிரிவிற்குட்பட்ட இத்திக்கண்டல் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் சுலியான்னம்மா என்பவருக்கு எல்.டி.ஒ.55 ஆம் இலக்க அனுமதிப்பத்திரம் மூலம் கடந்த 23-7-1974 ஆம் ஆண்டு மேட்டு நிலக்காணி வழங்கப்பட்டுள்ளது.குறித்த காணி தொடர்பான வெளிக்கள அறிக்கையின் பிரகாரம் காணியின் நான்கு பக்க எல்லையும், அனுமதிப்பத்திர நான்கு பக்க எல்லையும் மாற்றமில்லாமல் சரியாக காணப்படுகின்றது.

எனவே, காணி உரிமையாளரின் அனுமதியின்றி, காணியினை எவ்வித பொது தேவைகளுக்கும் பயன்படுத்த முடியாது என்பதனை தங்களின் கவனத்திற்கு அறியத்தருகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலிகள் தற்கொலை முயற்சி… காதலன் பொலிஸில் சரண்…!!
Next post 91 வயதில் டாக்டர் பட்டம் பெற்ற பெண்…!!