91 வயதில் டாக்டர் பட்டம் பெற்ற பெண்…!!

Read Time:1 Minute, 50 Second

dsfdfdபிரான்ஸை சேர்ந்த பெண்ணொருவர் தனது 91 ஆவது வயதில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். கெலேட் போர்லியர் எனும் இப் பெண் பெற்றது கௌரவ டாக்டர் பட்டமல்ல. பி.எச்.டி. பட்டப்படிப்புக்கான ஆராய்ச்சியை மேற்கொண்டு விசேட சித்தியுடன் இப் பட்டத்தை அவர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸின் கிழக்குப் பிராந்திய நகரான பெசான்கோனிலுள்ள பிரெஞ்ச் கொம்ட் பல்கலைக்கழகத்தில் கடந்த வாரம் தனது பி.எச்.டி (டாக்டர்) பட்டத்தை கெலேட் போர்லியர் பெற்றுக்கொண்டார்.

30 வருடங்களுக்கு முன்னர் தனது பி.எச்.டி. பட்டத்துக்கான ஆராய்ச்சியை கெலேட் போர்லியர் மேற்கொள்ள ஆரம்பித்தார். 1983 ஆம் ஆண்டில் தனது பணியிலிருந்து ஓய்வு பெற்றபின்னரே பி.எச்.டி. பட்டப்படிப்பு குறித்து தனக்கு ஆர்வம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், “நான் அடிக்கடி ஓய்வெடுத்துக்கொண்டதால் அந்த ஆராய்ச்சியை பூர்த்தி செய்வதற்குள் பல வருடங்கள் கடந்துவிட்டன” என்கிறார் அவர்.

20 ஆம் நூற்றாண்டின் இரண்டாவது அரைப் பகுதியில் பெசான்கோனில் குடியேறித் தொழிலாளர்கள்” எனும் தலைப்பில் தனது ஆராய்ச்சிக் கட்டுரையை கெலேட் போர்லியர் எழுதியமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தனியாரின் காணியில் அறநெறி பாடசாலை நடத்த அனுமதி மறுப்பு…!!
Next post சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இளைஞர் கைது…!!