By 24 March 2016 0 Comments

தனது கால் சதையினை சமைத்து சாப்பிட்ட அறிவியல் தொகுப்பாளர்! (வீடியோ இணைப்பு)…!!

eat_flesh_002பிபிசியில் அறிவியல் தொடர்பான செய்திகளை தொகுத்து வழங்கும் Greg Foot என்பவர் தனது கால் சதையினை சமைத்து சாப்பிட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இதன் நோக்கம் மனிம மாமிசத்தின் சுவை எப்படியிருக்கிறது என்பதை அறிந்துகொள்வதே என Greg Foot தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியான அந்த வீடியோவில், ஆய்வுகூடத்திற்குள் செல்லும் Greg Foot, அங்கு தனது வலது காலில் இருந்து சதையினை எடுத்து, அதனை ஆய்வு கூடத்தில் வைத்து சூடுபடுத்தி ஒரு சோதனை குழாயில் அடைத்து வைக்கிறார்.

பின்னர் அதனை முகர்ந்து பார்க்கையில், அதன் வாசனை நன்றாக இருக்கிறது, மேலும் மாட்டிறைச்சியை ஒத்த வாசனை வருகிறது.

எனவே, இந்த அற்புதமான உணவினை நான் அன்றாடம் சாப்பிடப்போகிறேன் எனக்கூறியுள்ளார்.

மேலும், மனித மாமிசத்தை சாப்பிடுவது சட்டப்படி குற்றம் என்றாலும், இது எனது தனிப்பட்ட ஆய்வு என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த சிலர், இந்த ஆய்வினை பார்க்கையில் குமட்டல் வருகிறது எனக்கூறியுள்ளனர்.



Post a Comment

Protected by WP Anti Spam