மலேசியாவில் ஐ.எஸ். ஆதரவாளர்கள் 13 பேர் கைது…!!
மலேசியாவில் தீவிரவாதம் பரவுவதை தடுக்கவும், தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகளை கண்காணிக்கவும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று தொடங்கப்பட்ட ஸ்டிங் ஆபரேசனில் 13 பேர் சிக்கியுள்ளனர். அவர்கள் அனைவரும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இத்தகவலை மலேசிய காவல்துறை தலைவர் காரித் அபு பக்கர், தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த நடவடிக்கையின்போது ஐ.எஸ். தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து மாநிலங்களிலும் தீவிரவாத தடுப்புப் படை அமைக்கப்படும் என்று காவல்துறை தலைவர் பேட்டி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.