தண்ணீர் தொட்டியில் வாலிபர் பிணம்: உஸ்மானிய பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்…!!

Read Time:2 Minute, 20 Second

015830ab-7384-475a-8ddf-28340504aa9f_S_secvpfஐதராபாத்தில் உள்ள உஸ்மானிய பல்கலைக்கழகம் போராட்டத்துக்கு பிரசித்தி பெற்றது.

தெலுங்கானா மாநிலம் உருவாக இந்த மாணவர்களின் போராட்டமே முக்கிய காரணமாக இருந்தது.

பல்கலைக்கழகத்தின் தண்ணீர் தொட்டியில் நேற்று வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் மாணவர் எனக்கருதி பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலை கிடைக்காத விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் பரவியது.

இதனால் மாணவர்கள் போராட்டம் தீவிரமானது. பிணத்துடன் அவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசுக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டனர்.

தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பிணத்தை நெருங்க விடாமல் போலீசாரை மாணவர்கள் தடுத்தனர். இதனால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

போலீசார் மீது மாணவர்கள் கல்வீசினார்கள். இதனால் போலீசார் தடியடி நடத்தி மாணவர்களை விரட்டி பிணத்தை கைப்பற்றினர்.

பிணமாக கிடந்த வாலிபரின் உடல் மற்றும் செல்போன் போலீசாரிடம் கிடைத்தது.

அந்த செல்போனில் பதிவான நம்பரை வைத்து விசாரித்ததில் பிணமாக கிடந்தவர் மாணவர் அல்ல என்பதும், மாணிக்கேஸ்வரர் நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஸ்ரீஹரிபாபு என தெரிய வந்தது.

தகவல் கிடைத்ததும் அவரது தாய் சவுடம்மா வந்து மகனின் உடலை அடையாளம் காட்டினார். 2 நாள் முன்பு வீட்டில் ஏற்பட்ட தகராறில் கோபித்துக் கொண்டு வெளியேறிய அவர் தண்ணீர் தொட்டியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

உண்மை நிலவரம் தெரிய வந்ததால் மாணவர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புனே கல்லூரி வளாகத்தில் மோதல்: 200 பேர் மீது வழக்கு…!!
Next post ஆந்திராவில் ஹோலி கொண்டாட்டத்தில் 5 பேர் பலி…!!