சந்திரனில் மனிதர்கள் குடியேற்றம்: இன்னும் ஏழாண்டுகளில் சாத்தியம் – நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை…!!

Read Time:1 Minute, 51 Second

d2e73d33-1886-44a0-946a-20e4cc68d9b9_S_secvpfசந்திரனில் மனிதர்களை குடியேற்றுவதற்கான முயற்சி பல ஆண்டுகளாக நடந்துவருகிறது. ஒருவேளை இந்த முயற்சி சாதகமானால் அது, மனிதக்குலத்தின் உச்சக்கட்ட சாதனையாக விளங்கும். இதற்காக தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், அடுத்த ஐந்து அல்லது ஏழு ஆண்டுகளில் நிலாவில் மனிதர்கள் வசிப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவை சேர்ந்த விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இதற்காக, வரும் 2022-ம் ஆண்டுக்குள் சுமார் 10 பேர்கள் வரை தங்கக்கூடிய வகையில் சந்திரனில் தளம்அமைக்க சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதற்கு 10 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில்ரூ.66915 கோடி) வரை செலவாகும் என்று கூறப்படுகிறது. இந்த தொகையானது, மேற்படி திட்டத்துக்காக முன்னர் மதிப்பிட்டப்பட்டிருந்த செலவு தொகையைவிட குறைவானது, என்பது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய நாடுகள், சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் செவ்வாய் கிரகத்தில் தளம் அமைப்பது தொடர்பான தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளன. அதற்கு முன்னதாகவே சந்திரனில் மனிதர்கள் வசிப்பதற்காக தளத்தை அமைக்கும் சவாலை அமெரிக்கா எதிர்கொண்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: வாலிபர் கைது…!!
Next post ஹோலி பண்டிகையையொட்டி பாகிஸ்தானில் போலி மது குடித்த 35 இந்துக்கள் பலி…!!