புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழப்பு…!!
கந்தானை, வெலிகம்பிட்டிய புகையிரத குறுக்கு வீதிக்கு அருகில் புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சிலபத்திலிருந்து கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த புகையிரதத்துடன் மோதியே குறித்த நபர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரவித்தனர்.
உயிரிழந்திருப்பவர் 45 வயதுடைய ஒருவர் என்பதுடன் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கந்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.