ஐ.நா. அதிகாரிகள் கொல்லப்பட்டதற்கு இஸ்ரேல் வருத்தம்

Read Time:1 Minute, 25 Second

Israel.flag1.jpgலெபனான் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் ஐ.நா. அதிகாரிகள் 4 பேர் உயிரிழந்ததற்கு இஸ்ரேல் பிரதமர் எகுட் ஆல்மெர்ட் வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஹிஸ்புல்லா தீவிரவாதக் குழுவுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதாகக் கூறி லெபனான் நாட்டையே இஸ்ரேல் ராணுவம் சின்னாபின்னமாக சிதைத்து வருகிறது. ஐ.நா. பாதுகாப்புப்படை முகாம் மீதும் இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீசின. இதில் ஐ.நா. அதிகாரிகள் 4 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதல் வேண்டுமென்றே திட்டமிட்டு நடத்தப்பட்டது என ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அன்னான் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் இந்தத் தாக்குதல் சம்பவம் ஒரு விபத்து எனவும் இதற்காக ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் கோபி அன்னானிடம் இஸ்ரேல் பிரதமர் எகுட் ஆல்மெர்ட் தெரிவித்துள்ளார். வேண்டுமென்றே திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்பதை அவர் மறுத்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இந்தியப் பெண்ணுக்கு ரூ.25 லட்சம் நஷ்டஈடு இங்கிலாந்து கோர்ட்டு தீர்ப்பு
Next post விண்வெளியில் தாவர உற்பத்தி செய்து மீண்டும் பூமிக்கு கொண்டு வரப்படும்: செயற்கைக்கோளை ஏவும் சீனா