By 26 March 2016 0 Comments

கல்முனையை பட்டப்பகல் உலுக்கிய படுகொலை! காலம் கடந்து வெளியாகும் சில உண்மைகள்…!!

blogger-image-771386178அன்று சனிக்கிழமை பி.ப.3.00மணியிருக்கும். ஒரு திடுக்கிடும் செய்தி அப்பிரதேசமெங்கும் காட்டுத்தீபோல்பரவியது. கல்முனையில் ஒரு இளம்பெண் கழுத்துவெட்டப்பட்டுக்கொலை செய்யப்பட்டதுதான் அந்த செய்தி.நீண்டநாட்களுக்குப்பிறகு இச்செய்தி கிடைத்தமை சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும் உண்மையாக என்ன நடந்தது? என்பதையறிய பலரும் உசாரானார்கள்.

மறு கணம் நானும் கல்முனைக்கு விரைந்தபோது அங்கு கோயில் திருவிழாவொன்றில் எப்படி மக்கள் கூட்டம் நிற்குமோ அப்படி சனம் திரண்டு நின்றது.

போக்குவரத்துப்பொலிசார் சனத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடினர். சம்பவம் இடம்பெற்ற இடம் கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியில் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையிலுள்ள மிகவும் சனசந்தடிமிக்க பசாரில் உள்ளது. அங்குள்ள இந்நிதிநிறுவன அலுவலகத்தில் இச்சம்பவம் பட்டப்பகலில் இடம்பெற்றுள்ளமை பலரையும் வியப்புக்குள்ளாக்கியுள்ளது.

கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதி என்ற காரணத்தினால் வாகனங்களின் எண்ணிக்கை அதிகம். எனவே அவற்றை வேறு தற்காலிக பாதையால் திசைதிருப்பிக்கொண்டிருந்தனர் பொலிசார்.

நீண்டநாட்களுக்குப்பிறகு கல்முனையெங்கும் ஒரேபரபரப்பு. பதட்டம்.அனைவர் முகத்திலும் திகில் பீதி. வீதியால் வருவோர் போவோர் எல்லாம் என்ன நடந்தது? என்ற கேள்வியைத்தான் கேட்டனர்.ஆனால் யாருக்கும் சரியான தகவலைச் சொல்லமுடியவில்லை.

சம்பவம்! சம்பவம் என்னவென்றால் கல்முனை சர்வோதய அபிவிருத்தி நிதி நிறுவனத்தின் இளம் பெண்முகாமையாளர் கழுத்து வெட்டப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அவரது சடலம் மாபிள் நிலத்தில் இரத்தவெள்ளத்தில் குப்புறக்கிடந்தது.

கல்முனையையடுத்துள்ள நற்பிட்டிமுனை குளோரி வீதியைச் சேர்ந்த திருமதி திலீபன்; சுலக்ஷனா (வயது 33) என்ற இளம் பெண் இவ்வாறு வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். அவர் திருமணம் முடித்தவர். மூன்றாம்வகுப்பில் படிக்கும் 8வயது பெண் பிள்ளையின்தாய். கணவர் தையல்வேலை செய்பவர்.

மட்டக்களப்பு சர்வோதய அபிவிருத்தி நிதி நிறுவனத்தில் உதவி முகாமையாளராகப்பணியாற்றிய இவர் பதவியுயர்வு பெற்று கல்முனைக்கிளைக்கு முகாமையாளராக பதவியேற்று ஆக இருவாரங்களே ஆகின்றன.

இவரது இடத்திற்கு கல்முனை முகாமையாளராகவிருந்த பொன்னம்பலம் உதயகுமார் என்பவர் இடமாற்றப்பட்டிருந்தார். சர்வோதயம் என்பது உலகறிந்த நாமம். கலாநிதி ஏ.ரி.ஆரியரத்னாவின் சேவையின் அடையாளமாக மிளிர்ந்த சர்வோதயத்தின் புதிய ஒரு நிதி நிறுவனமாக சுமார் ஆறுவருடங்களுக்குமுன் தேசோதய அபிவிருத்தி நிதிக்கம்பனி(DFCC) உருவாக்கப்பட்டது.

சர்வோதய அமைப்பின் ஒரு துணை நிறுவனமாக உருவாக்கப்பட்ட இந்நிறுவனத்தின் பெயரை கடந்த ஆறு மாதத்திற்கு முன்புதான் சர்வோதய அபிவிருத்தி நிதி நிறுவனம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. சர்வோதயத்தில் சாதாரண உறுப்பினராக இணைந்து சுமார் 15வருடங்கள் சேவையாற்றிய உதயகுமார் படிப்படியாக உயர்ந்து முகாமையாளராக பதவியுயர்வுபெற்றவர்.

சாந்தமான குணம் படைத்தவராவார்.சண்டைசச்சரவிற்கு செல்லாதவர் எனக்கூறபப்டுகிறது. அவரே கொலையுண்ட தனது நெருங்கிய உறவினரான சுலக்சனாவை சர்வோதயத்தில் இணைத்தவர்.

சுலக்சனாவும் சுமார் 6வருடங்கள் பணியாற்றி மட்டக்களப்பில் உதவிமுகாமையாளராக பதவியுயர்வுபெற்று இருவாரங்களுக்கு முன்பு கல்முனைக்கு முகாமையாளராக நியமனம் செய்யப்பட்டார். ஒரே பரபரப்பு! இது இவ்வாறிருக்க இக்கொலையையார் செய்தார்? என்பது தொடர்பில் அக்கணம் யாருக்கும் தெரியாது.

ஆனால் பலதரப்பட்ட வதந்திகள் கைகால்வைத்து சிறகடித்துப்பறந்தன.

எதை நம்புவது எதனை நம்பாமல் விடுவது என்று தெரியாமல் ஒரே பரபரப்பு மக்களுக்கு.

வெளியில் ஆயிரக்கணக்கான மக்கள் பலத்த எதிர்பார்ப்பின் மத்தியில் வீதியிலும் அருகிலிருக்கக்கூடிய கட்டடங்களிலும் ஏறிநின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். கொலையாளியை நாம் அடித்துக்கொல்வோம் என்ற வண்ணம் பொலிசாருக்கே அச்சுறுத்தலாக இளைஞர்கூட்டம் சில.மொத்தத்தில் களேபரம் உருவாகக்கூடிய நிலைமைதான் அங்கு காணப்பட்டது. அங்கு வந்த பொலிஸ் பொறுப்பதிகாரி கபார் அங்குநின்ற சமுகசேவையாளர் ராஜனை அழைத்து நாம் விசாரணைசெய்து கொலையாளியைக்கண்டுபிடிப்போம்.

எனவே மக்களை தயவுசெய்து பொறுமைகாத்து ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அதில் குறிப்பிட்டுச்சொல்லக்கூடிய முக்கியசெய்தி என்னவென்றால் வெளியில் நின்ற கூட்டத்தில் கொலைச்சந்தேகநபரும் சாரனுடன் நின்றிருக்கிறார் என்பதே.

இத்தனைக்கும் அந்த நிதிநிறுவனக்கட்டடம் மூடிக்காணப்பட்டது. உள்ளே என்ன நடக்கிறதென்பது வெளியே நின்றவர்களுக்குத்தெரியாது. கர்ப்பிணியா?
கொலைசெய்யப்பட்டபெண்முகாமையாளர்கர்ப்பிணிஎனதகவல்கள்வெளியாகியபோதிலும்அதுஊர்ஜிதம்செய்யப்படவில்லை. அப்படி கர்ப்பிணியாயின் இது இரட்டைக்கொலையாக மாறலாம்.

இவர் கடமைக்குச்சென்றதும் வீட்டிலிருந்து பகல் உணவுஅனுப்பப்படுவதேவழக்கமாக இருந்து வந்துள்ளது. சம்பவதினம், மதியச்சாப்பாட்டுக்குவீட்டுக்கு வருவதாகதனதுதாயாரிடம்கூறிவிட்டே சுலக்ஷனா சென்றுள்ளார். வீட்டிலிருந்து அன்றைய தினம் அலுவலகம் புறப்படுவதற்கு சற்று முன்னர தாயாரை அழைத்த சுலக்ஷனா, ‘பிள்ளைக்குச்சாப்பாடுகொடுங்கள்.

நான்சாப்பாட்டுக்குவருகிறேன்’என கூறி விட்டே அலுவலகம் புறப்பட்டுள்ளாரென குடும்பஉறவினர்கள்தெரிவித்தனர்.

உள்ளே என்ன நடந்தது? இச்செய்தியறிந்ததும் கல்முனை பொலிஸ் நிலைய தலைமையகப் பொறுப்பதிகாரி எ.டபிள்யு .அப்துல் கபார் தலைமையிலான குழுவினர் 3மணியளவில் ஸ்தலத்திற்கு விரைந்தனர்.

உள்ளே சென்று சடலத்தை பார்த்துவிட்டு வெளியேவந்து நீதிபதியின் வருகைக்காக வெளியே காத்துக் கொண்டிருந்தனர். இதற்கு மேலதிகமாக உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் திரு ஹேமந்தவும் சென்றிருந்தார்.

செய்தி தெரிவிக்கப்பட்டதும் கல்முனை மாவட்ட நீதிபதி திரு.இராமகமலன் அவர்களும் வருகை தந்திருந்தார்கள். அறிவித்தல் கொடுத்ததற்கிணங்க அம்பாறையிலிருந்த விசேடமாக வரவழைக்கப்பட்ட சொக்கோ புலனாய்வு சோதனைப்பிரிவினரும் மோப்பநாய்களுடன் வந்திருந்தனர்.

இவர்கள் அனைவரும் சுமார் 4மணியளவில் உள்ளே சென்றனர்.

சடலத்தை நீதிபதி பார்வையிட்டபின்னர் வெளியே நின்றிருந்த கொலையுண்டவருடன் பணியாற்றும் ஏனைய ஊழியர்களை ஒவ்வொருவராக உள்ளே அழைத்து விசாரித்த வண்ணமிருந்தனர்.

மூடிய அலுவலகத்தினுள் இவ்வசாரணை மனித்தியாலக்கணக்கில் நடைபெற்றுக்கொண்டிருந்தது.சுமார் ஆறுபேர் இவ்வாறு விசாரணைக்குட்படுத்தப்பட்டனர். கொலையுண்டவருடன் வேலைசெய்யும் இரு பெண்களும் நான்கு ஆண்களும் இவ்விதம் விசாரணைக்குட்படுத்தப்பட்டனர்.

சிவப்புநிறத் தலைக்கவசம்! அப்போது அங்கிருந்த சிவப்புநிறத் தலைக்கவசம் பொலிசாரின் கவனத்தை திருப்பியது.

இது யாருடையது? என பொலிசார் வினாவ இது முன்னாள் முகாமையாளர் உதயகுமாரினுடையது என விசாரிக்கப்பட்டுக்கொண்டிருந்த ஒரு ஊழியரால் பதிலளிக்கப்பட்டது. அவர் வெளியே நிற்பதாகவும் கூறப்பட்டது.

அவரை உள்ளே வருமாறு பொலிசார் அழைக்க அவரும் உள்ளே வந்தார். இத்தலைக்கவசம் எம்முடையதா? என பொலிசார் கேட்க ஆம் என்னுடையதுதான் என உதயகுமார் பதிலளித்தார்.

நீர் எதற்காக இங்கு வந்தீர்? என மீண்டும் கேட்டதற்கு இப்படியொரு சம்பவம் இடம்பெற்றதாக அறிந்து வந்தேன்.நான் ஏலவே முகாமையாளராகக்கடமையாற்றிய நிறுவனம் என்பதால் அதனைப்பார்க்கவந்தேன் என்றார்.

பொலிஸ் பொறுப்பதிகாரி கபார் புத்திசாதுரியமாக கேள்விகளை அடுக்கிக்கொண்டு போகிறார்.விசாரணை முடிகிறது.

சரி கையொப்பத்தை இட்டுவிட்டு போகலாம் என்றார் பொலிஸ் பொறுப்பதிகாரி கபார். அவரும் ஒப்பத்தையிட்டுவிட்டு செல்லமுயற்சித்தவேளை அருகிலிருந்த பொலிஸார் இவரது கையில் இரத்தக்கறை இருப்பதைக்கண்டு கபாரிடம் சொன்னார்.

சற்றுப் பொறுங்கள்! இவ் இரத்தக்கறை எப்படி வந்தது? எனக் கேட்டார். அதற்கு அவர் நான் வீட்டில் இன்று ஓடாவி வேலை செய்தேன்.

ஆணி அடிக்கும் போது கையில்பட்டுவிட்டது.அதனால் காயம் ஏற்பட்டது என்றார்.

மறுகணம் அவரது கையை பிடித்துப்பார்க்க கபார் முயற்சித்தபோது அவரது கையில் நடுக்கம் ஏற்பட்டதை கபார் இலகுவாக அனுபவத்தின்வாயிலாக அறிந்துகொண்டார். அதனால் அவருக்கு சிறு சந்தேகம் ஏற்பட்டது.

அவரை அங்கேயே வைத்து வீட்டிற்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அவரது மனவியிடம் இன்று வீட்டில் ஓடாவிவேலைகள் இடம்பெற்றதா? என வினவியபோது அப்படியொன்றும் நடக்கவில்லை என அவர் பதிலளித்துள்ளார்.

இதனால் சந்தேகம் வலுவுற்றது. சடலத்தின் வாயில் நகம்! கையை மீண்டும் தூக்கிப்பார்த்த கபாருக்கு அவரதுவிரலிலிருந்த நகத்தைக்காணாதது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

அவர் உடனே பின்னால் அடுத்தஅறையில் குப்புறக்கிடந்த சடலத்தை நிமிர்த்தி வாயைப்பார்த்ததும் தூக்கிவாரிப்போட்டது.

அதாவது சடலத்தின் வாயில் நகம் இருந்தது.Post a Comment

Protected by WP Anti Spam