சமையலறையில் வீசும் நாற்றத்தைப் போக்கும் எளிய வழிமுறைகள்…!!

Read Time:4 Minute, 14 Second

kitchen-cleaning-14-1457957015நீங்கள் சமையல் செய்து முடித்த பின்பும் உங்கள் சமையல் கூடத்தில் கெட்ட நாற்றம் வருகின்றதா? இதை தீர்க்க இதோ சில வழிகள். இந்த டிப்ஸை பின்பற்றுவதால் நாற்றம் போவதுடன் இனிய மணம் உங்கள் வீடு முழுக்க வருவதை நீங்கள் உணர முடியும். பின்பு என்ன ஒரு கை பார்க்க வேண்டியது தானே.

மசாலா பொருட்களை வைத்தே சமையல் கூடத்தில் வீசும் கெட்ட நாற்றத்தை போக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். Potpourri அதாவது உலந்த மலர் மற்றும் மசாலாக் கலவைகளைக் கொண்டே வாசனையை ஏற்படுத்த முடியும்.
இங்கே இதுப்போன்ற டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பயன்படுத்தி உங்கள் வீட்டு சமயலறையை நறுமணம் பெறச் செய்யுங்கள்.

ஆரஞ்சு தோல் தண்ணீர்

ஒரு பாத்திரத்தில் ஒரு கோப்பை தண்ணீர் எடுத்து கொள்ளவும். தண்ணீர் மிதமான தீயில் கொதித்துக் கொண்டிருக்கும் போது ஆரஞ்சு தோலை அதில் போடவும். இரண்டு நிமிடத்திற்கு அதை கொதிக்க விட வேண்டும். பிறகு அதில் லவங்கம் போடவும். அதனுடன் ஏலக்காயும் சேர்க்கலாம். ஆனால் ஏதாவது ஒன்றை மட்டும் பயன்படுத்தினால் நல்லது. பின் அதனை வீட்டின் மூலைகளில் வைத்துவிட்டால் போதும், துர்நாற்றம் நீங்கும்.

நாற்றத்தை போக்க பிரட் டோஸ்ட் செய்யவும்

சமையலறை நாற்றத்தைப் போக்க பிரட் டோஸ்ட் செய்ய வேண்டும். இதனால் நாற்றம் இருந்த இடம் தெரியாமல் போகும். அதனுடன் நல்ல மணமும் வீடு முழுவதும் பரவும். ஆகவே பிரட் டோஸ்ட் செய்து நறுமணம் கொண்டு வாருங்கள்.

பேக்கிங் சோடாவை கொண்டு ஒரு ட்ரிக்

சமையலறையில் இருக்க வேண்டிய மிக முக்கியமான பொருள் பேக்கிங் சோடா. சமைக்கும் போது வரும் ஆசிட்டை உறிஞ்சக் கூடிய குணம் இதற்கு உண்டு. ஆகையால் கெட்ட நாற்றத்தை போக்க பேக்கிங் சோடா எடுங்கள்.

எலுமிச்சை தண்ணீர்

உங்கள் குளிர்சாதனப்பெட்டியில் (fridge) நாற்றம் வீசுகின்றதா கவலை வேண்டாம். ஒரு கப்பில் எலுமிச்சை தண்ணீர் எடுத்து கொள்ளுங்கள். அதை ப்ரிட்ஜில் 10 நிமிடம் வைத்து பின்பு பாத்திரத்தை வெளியே எடுத்து விடுங்கள். பிறகு பாருங்கள் நாற்றம் இருந்த இடம் தெரியாமல் சென்று விடும்.

சர்க்கரை சோப்பு

மீன் போன்ற அசைவ உணவை சமைத்தால் உங்கள் கையில் நாற்றம் போகாமல் இருக்கின்றதா? அப்படி என்றால் சர்க்கரை தான் இதற்கு சிறந்த மருந்து. சோப்பால் கையை கழுவுவதற்கு முன் சக்கரையை கொண்டு கழுவ வேண்டும். பின்பு பாருங்கள் நாற்றம் இருந்த இடம் தெரியாது.
வினிகர் எடுங்கள் நாற்றத்தை போக்குங்கள்

வினிகரும் நாற்றத்தை போக்கும் ஒரு சிறந்த பொருள். அதிலும் வெள்ளை வினிகர் எடுத்து, அதில் ஒரு துண்டு லவங்கத்தை போட்டு வையுங்கள்.

இவை இரண்டும் கலந்து சிறந்த நறுமணம் கொடுக்கும். பிறகு பாருங்கள் வீட்டுக்கு வருவோர் அனைவரும் என்ன நறுமணம் இது என்று கேட்கும் அளவிற்கு இனிய நறுமணம் வீசும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வயிற்றில் புண் இருக்கா? சீமைதுத்தி கீரை சாப்பிடுங்க…!!
Next post உற்சாகமான தாம்பத்தியத்திற்கு மூன்று வழிகள்…!!