லிபியா: ராக்கெட் தாக்குதலில் கேரள நர்சு கைக்குழந்தையுடன் பரிதாப பலி…!!

Read Time:2 Minute, 16 Second

82cf53e4-2f1c-4b98-b7b6-08688417f2bc_S_secvpfலிபியாவில் நடந்த ராக்கெட் தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த செவிலியர் தனது கைக்குழந்தையுடன் பலியானார்.

வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் கடந்த 2011–ம் ஆண்டு முதல் உள்நாட்டு சண்டை நடந்து வருகிறது. அந்நாட்டின் பெரும்பாலான பகுதிகள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலும், சில பகுதிகள் தீவிரவாதிகளின் பிடியிலும் உள்ளன. இதில் தீவிரவாதிகளின் வசமுள்ள பகுதியில் வெவ்வேறு தீவிரவாத குழுக்கள் இயங்கி வருகின்றன. இவற்றுக்கு இடையேயும் அடிக்கடி சண்டை நடப்பது வழக்கம்.

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வெல்லியனூர் கிராமத்தைச் சேர்ந்த விபின் குமார், அவருடைய மனைவி சுனு சத்யன்(வயது29) ஆகியோர் தங்களுடைய 1½ வயது மகன் பிரணவ்வுடன் இங்குள்ள சப்ரதா நகரில் லிபியா தலைநகர் திரிபோலியில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஜவையா நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தனர்.

சுனு சத்யன் அங்குள்ள ஜாவியா மருத்துவ மையத்தில் நர்சாக பணியாற்றி வந்தார். அவருடைய கணவர் விபின் குமார் ஆண் நர்சாக பணியாற்றி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு விபின்குமார் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் சுனுவும், அவருடைய கைக்குழந்தையும் உறங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் திடீரென்று அவர்களது வீட்டின் மீது ஒரு ராக்கெட் விழுந்து, வெடித்துச் சிதறியது.

இதில் சம்பவ இடத்திலேயே சுனுவும், அவருடைய குழந்தையும் உடல் சிதறி பலியாயினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விந்து தானம் செய்தவரையே மூன்றாவது கணவராக ஏற்றுக்கொண்ட பெண்..!!
Next post வாய்க்காலில் தவறி விழுந்து மாற்றுத்திறனாளி வாலிபர் பலி…!!