பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் பகுதியில் ஆண் வேடத்தில் வாழ்ந்த பெண் வீராங்கனை…!!

Read Time:2 Minute, 38 Second

4aec485a-9b2c-4159-a114-06f878da6e43_S_secvpfவடமேற்கு பாகிஸ்தானில் உள்ள நகரம் தென்வசிரீஸ்தான். ஆப்கானிஸ்தான் எல்லை அருகேயுள்ள இப்பகுதி தலிபான் தீவிரவாதிகளின் கோட்டையாக திகழ்கிறது.

உலக அளவில் மிகவும் ஆபத்தான இடங்களின் பட்டியலில் இது இடம் பெற்றுள்ளது. இங்கு பெண்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் உள்ளன. அங்கு பெண்கள் வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாது. கல்வி கற்கவோ, ஆடம்பர உடை அணியவோ அனுமதி இல்லை.

இவ்வளவு கட்டுப்பாடு மிக்க இப்பகுதியில் ஒரு பெண் ஆண் போன்று வேடம் அணிந்து வசித்தார். ஒரு விளையாட்டு வீராங்கனை ஆக வேண்டும் என்ற தனது லட்சியத்தை நிறைவேற்ற அவ்வாறு வாழ்ந்தார். அவரது பெயர் மரியா துர்பாக்கை.

இவர் 4 வயதிலேயே ஆண்கள் போன்று உடையணிந்து அப்பகுதியை வலம் வந்தார். அவருக்கு தந்தை பக்க பலமாக இருந்தார். மரியா முதலில் தனது பெயரை சென்ஜிஸ்கான் என மாற்றி கொண்டார். முதலில் பளு தூக்கும் வீரராக திகழ்ந்த அவர் பின்னர் ஸ்குவாஷ் விளையாட்டின் மீது அதிக ஈடுபாடு கொண்ட வீராங்கனையாக மாறினார்.

இந்நிலையில் தீவிர மன அழுத்தம் காரணமாக தான் பெண் என்ற உண்மையை வெளியுலகுக்கு வெளிப்படுத்தினார். இதனால் தனது எதிர்காலம் வீணாகப் போய் விடும் என கருதினார்.

எனினும் தொடர்ந்து போட்டிகளில் கலந்து கொள்ள அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது பாகிஸ்தானின் சிறந்த ஸ்குவாஷ் வீராங்கனையாக இருந்து வருகிறார். மேலும் உலக அளவில் சிறந்த வீராங்கனை பட்டியலில் 46–வது இடத்தில் உள்ளார்.

இவர் தனது சுயசரிதையை புத்தகமாக எழுதியுள்ளார். அதில் பாகிஸ்தானில் தலிபான்களின் கட்டுப்பாட்டில் பெண்கள் அடையும் துன்பங்கள் குறித்தும், தனது வாழ்க்கையின் இளமைப் பருவம் தொடர்பாகவும் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்காவில் குடிபோதையில் இருந்த துணை விமானி கைது: பயணிகள் விமானம் ரத்து….!!
Next post ஆண் இனப்பெருக்க உறுப்புடன் பிறந்த அதிசய பெண் மீன்…!!