ஆப்பிள் நிறுவனம் மீது அமெரிக்க அரசு தொடர்ந்த வழக்கு கைவிடப்பட்டது…!!

Read Time:5 Minute, 14 Second

6dcc476b-3c8d-47e7-9808-1f221bfc9e66_S_secvpfஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனை திறப்பதற்கான பாஸ்வேர்டை அமெரிக்க காவல் துறைக்கு அளிக்க மறுத்த அந்நிறுவனத்தின் மீது அமெரிக்க அரசு தொடர்ந்த வழக்கு கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் பெர்னார்டினோ நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2-ம் தேதி ரிஸ்வான் பரூக் என்பவரும் அவரது மனைவியும் 14 பேரைச் சுட்டுக் கொன்றனர். அவர்கள் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் ஆதரவாளர்கள் எனக் கூறப்படுகிறது. பின்னர் காவல் துறையுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் அவர்கள் இருவருமே சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதனிடையே, அவர்களிடமிருந்த ஐபோன் கைப்பற்றப்பட்டது. ஆனால், அது கடவுச் சொல்லால் (பாஸ்வேர்டு) பாதுகாக்கப்பட்டிருந்தது. ஆப்பிள் ஐபோனைப் பொருத்தவரை, கடவுச்சொற்களை குறிப்பிட்ட முறைக்குமேல் தவறாக பயன்படுத்தினால், அந்த போனில் உள்ள முந்தைய தகவல் பதிவுகள் அனைத்தும் அழிந்துவிடும் வகையில் செயல்படக்கூடிய பாதுகாப்பு அம்சம் (security cover) நிறுவப்பட்டுள்ளது.

ரிஸ்வான் பரூக்கின் ஐபோனில் பதிவு செய்யப்பட்டிருந்த கடவுச் சொல்லை அமெரிக்க எஃப்.பி.ஐ. அதிகாரிகளால் ஊடுருவ (ஹேக் செய்ய) முடியவில்லை. இதைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனத்திடம் உதவி கோரப்பட்டது. ஆனால், வாடிக்கையாளரின் நம்பிக்கை எங்களுக்கு முக்கியம், அவர்கள் கோரினால் மட்டுமே கடவுச் சொல்லைத் தரமுடியும் எனக் கூறி போலீசாரின் கோரிக்கையை அந்நிறுவனம் மறுத்துவிட்டது.

அமெரிக்க அரசு பலமுறை நிர்பந்தம் செய்தும், தனது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையும், அந்தரங்கமும் முக்கியம் எனக் கூறி இவ்விவகாரத்தில் ஆப்பிள் நிறுவனம் உறுதியாக இருந்து விட்டது. ஆப்பிள் நிறுவனத்துக்கு ஆதாரவாக கூகுள், பேஸ்புக் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட இருபது நிறுவனங்கள் குரல் கொடுத்தன.

இதைத் தொடர்ந்து எஃப்.பி.ஐ. தரப்பில் கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, ஐபோனை ஊடுருவுவதற்கு எஃப்.பி.ஐ.-க்கு உதவ சிறப்பு மென்பொருளை உருவாக்கித்தர வேண்டும் என ஆப்பிள் நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனிடையே, ஆப்பிள் நிறுவனத்தின் உதவி இல்லாமலேயே அமெரிக்க போலீசார் சமீபத்தில் பரூக்கின் ஐபோனுக்குள் ஊடுருவி தங்களுக்கு வேண்டிய முக்கிய தகவல்களை திரட்டியுள்ளனர். இதனால், எந்தவித கடவுச்சொல்லாக இருந்தாலும் அதனுள்ளே ஊடுருவ முடியும் என்ற நம்பிக்கை போலீசாருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

எனவே, இனி இந்த விவகாரத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் தயவு நமக்கு தேவை இல்லை என போலீசார் முடிவு செய்தனர். இந்த முடிவை அமெரிக்க அரசின் நீதித்துறைக்கு அவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, இவ்வழக்கு தொடர்பாக நேற்று கலிபோர்னியா நீதிமன்றத்தில் அமெரிக்க அரசின் சார்பில் இரண்டு பக்கங்களை கொண்ட பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் கடவுச்சொல் விவகாரம் தொடர்பாக, அரசின் சார்பில் அந்நிறுவனத்தின்மீது தொடரப்பட்ட வழக்கை அமெரிக்க நீதித்துறை கைவிடுவதாக அந்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் இதுதொடர்பான முறையான அறிவிப்பை நீதிமன்றம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆப்பிள் ஐபோனின் கடவுச்சொல்லுக்குள் ஊடுருவும் முயற்சியில் அமெரிக்க போலீசார் வெற்றிபெற்றுள்ளது தொடர்பாக ஆப்பிள் நிறுவனம் இதுவரை எந்த கருத்தும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தைவானில் மெட்ரோ ரெயில் நிலையம் முன்பு சிறுமி தலை துண்டித்து படுகொலை..!!
Next post எகிப்து விமானத்தை கடத்தியவன் கைது – பிணைக் கைதிகள் பத்திரமாக விடுவிக்கப்பட்டனர்…!!