மியூசியமாகும் சார்லி சாப்ளின் வசித்த சுவிட்சர்லாந்து நாட்டு வீடு

Read Time:1 Minute, 31 Second

நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் வசித்த சுவிட்சர்லாந்து நாட்டு வீடு அருங்காட்சியகமாகிறது. உலகைக் கலக்கிய மிகச் சிறந்த நடிகர்களில் சார்லி சாப்ளின் மறக்க முடியாதவர். வசனம் பேசாமல் வெளியான அவரது படங்கள் அனைத்தும் உலகம் முழுவதும் பேசப்பட்டவை, பாராட்டப்பட்டவை, விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டவை. சார்லி சாப்ளின் தனது வாழ்க்கையின் கடைசி 25 ஆண்டு காலத்தை சுவிட்சர்லாந்தில் கழித்தார். அங்குள்ள புகழ் பெற்ற லெமான் ஏரியின் அருகே உள்ள வீட்டில்தான் தனது கடைசி நாட்களை கழித்தார் சாப்ளின். உலகெல்லாம் தன்னைப் பற்றிப் பேச வைத்து விட்டு, தனது வாழ்க்கையை இங்கு அமைதியாக கழித்து முடித்த சாப்ளின் இந்த வீடு தற்போது அருங்காட்சியமாகப் போகிறது. சமீபத்தில் இதை சுவிட்சர்லாந்து அரசு விலைக்கு வாங்கியது. இந்த வீட்டில் நிரந்தர கண்காட்சி, 200 பேர் அமரும் வகையிலான திரையரங்கம், ஒரு ஹோட்டல், ஒரு விற்பனை நிலையம் உள்ளிட்டவை அமைக்கப்படவுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தன்னை கொல்ல சார்ள்ஸ் திட்டமிட்டுள்ளதாக டயானா எழுதிய கடிதம் விசாரணைக் குழுவிடம் ஒப்படைப்பு
Next post உன் மனைவி எனக்கு; என் மனைவி உனக்கு : கண்ணை மறைக்கும் காதல் விளையாட்டு