ஜனாதிபதி நாளை மட்டு விஜயம்…!!

Read Time:2 Minute, 14 Second

1299674710Untitled-1ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதற்கான சகல பூர்வாங்க ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முதலமைச்சரின் அழைப்பின் பேரில் ஏறாவூருக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏறாவூர் ஐயங்கேனி ஜின்னா வீதியில் அமைக்கப்பட்டுள்ள பாரிய கிழக்கு ஆடைத்தொழிற்சாலை மற்றும் கைத்தறி உற்பத்தி தொழிற்சாலை என்பவற்றை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கவுள்ளார்.

பிற்பகல் 3.00 மணியளவில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்நிகழ்வுகளில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஏனைய அதிதிகளாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண ஆளுனர், பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், அமைச்சின் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

குறித்த கைத்தொழில் பேட்டையின் மூலம் கிழக்கில் சுமார் 5000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பயணப்பையை திருடிய 4 பாடசாலை மாணவர்கள் கைது..!!
Next post அட பாவமே!! இப்படி ஒரு அவமானம் தேவையா??அதான் பிளான் பண்ணி பண்ணனும்…!!