அரக்கோணம் அருகே தனியார் பள்ளி பஸ் கவிழ்ந்தது: 3 மாணவர்கள் படுகாயம்…!!

Read Time:1 Minute, 50 Second

201604011606589476_private-school-bus-accident-3-people-injured_SECVPFதனியார் பள்ளி பஸ் கவிழ்ந்து ஒரு மாணவி, 2 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

அரக்கோணம் அடுத்த தக்கோலம் பேரம்பாக்கத்தில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தக்கோலம் அருகே உள்ள உரியூர் குப்பத்தை சேர்ந்த மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களை தினமும் பள்ளி பஸ் வந்து அழைத்து செல்லும்.

வழக்கம்போல், இன்று காலையில் பள்ளி பஸ் உரியூர் குப்பம் கிராமத்திற்கு வந்து ஒரு மாணவி 2 மாணவர்களை ஏற்றிக் கொண்டு பள்ளிக்கு சென்றது. பஸ்சில் மாணவ, மாணவிகள் டிரைவரையும் சேர்த்து மொத்தம் 4 பேர் மட்டுமே இருந்தனர்.

பழைய கேசவரம் அருகே சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சில் இருந்த மாணவி, 2 மாணவர்கள் லேசான காயமடைந்தனர். பஸ்சை ஓட்டிய டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

விபத்தை பார்த்த அப்பகுதி மக்கள் மற்றும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் காயமடைந்த மாணவி, மாணவர்களை பத்திரமாக மீட்டனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து தக்கோலம் சப் – இன்ஸ்பெக்டர்கள் அன்புச்செல்வி, சுப்பிரமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிரிய அகதிகளை போர்ப்பகுதிக்கு வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பும் துருக்கி: பொது மன்னிப்பு சபை அதிர்ச்சி தகவல்…!!
Next post சீனாவில் காட்டுத்தீயில் சிக்கி வனத்துறை அதிகாரிகள் 2 பேர் பலி…!!