சூகி அரசு ஆலோசகராக எதிர்ப்பு: மியான்மரில் ராணுவம் ஆளும் கட்சி மோதல்…!!

Read Time:2 Minute, 21 Second

201604021457580680_Aung-San-Suu-Kyi-opposition-government-adviser_SECVPFமியான்மரில் சூகி அரசு ஆலோசகராக நியமிக்கப்படுவதற்கு ராணுவம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மியான்மரில் கடந்த 50 ஆண்டு கால ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்தது. நவம்பர் மாதம் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் ஆன்சாங் – சூகியின் தேசிய ஜனநாயக கட்சி அமோக வெற்றி பெற்றது.

சூகி வெளிநாட்டவரை திருமணம் செய்ததால் அவரோ, அவரது குழந்தைகளோ அரசு உயர் பதவி வகிக்க முடியாது.

எனவே, தனது நெருங்கிய நம்பிக்கைக்குரிய உதவியாளரை சூகி அதிபராக்கினார். அவர் அதற்கு அடுத்தபடியாக வெளியுறவு துறை மந்திரி பதவி ஏற்றார்.

இந்தநிலையில் அவர் அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இது அதிபருக்கு சமமான பதவி. அரசின் அனைத்து நடவடிக்கைகளிலும் அதிபருடன் இணைந்து நேரடியாக செயல்பட முடியும்.

இச்சட்டம் நேற்று பாராளுமன்றத்தின் மேல் சபையில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. கீழ்சபையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் சூகியின் நியமனத்துக்கு ராணுவம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்தில் ராணுவத்தின் பிரதிநிதி கர்னல் மியின்ட் ஸ்வீ எதிர்ப்பு தெரிவித்து பேசினார்.

அரசின் இந்த முடிவை அரசியல் சட்ட நடுவர் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என சில உறுப்பினர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இருந்தாலும் சூகியின் இந்த நியமனத்தை ராணுவத்தால் தடுக்க முடியாது.

ஏனெனில் மியான்மர் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் சூகி கட்சிக்கு தனிப்பெரும்பான்மையாக 75 சதவீதம் எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது. அதன் மூலம் இச்சட்டம் எதிர்ப்பின்றி நிறைவேற்ற முடியும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மும்பையில் காதல் தோல்வியால் டி.வி. நடிகை தற்கொலை…!!
Next post காட்டு யானையின் தாக்குதலில் இளைஞர் உயிரிழப்பு..!!