சீனாவில் தானமாக வழங்கும் உறுப்புகள் வீணாகும் அவலம்…!!

Read Time:1 Minute, 51 Second

201604021553562727_Providing-donated-organs-in-China-wasted_SECVPFபராமரிப்பு இல்லாததால் சீனாவில் தானமாக வழங்கும் உடல் உறுப்புகள் வீணாகின்றன.

ஆசியா கண்டத்தில் மனித உடல் உறுப்புகளை தானம் பெறுவதில் சீனா முதலிடம் வகிக்கிறது. அதே நேரத்தில் அங்கு தானம் பெறும் உடல் உறுப்புகள் முறைப்படி தேவைப்படும் நோயாளிகளுக்கு பொருத்தப்படாமல் வீணாகிறது. தானமாக பெறப்படும் உடல் உறுப்புகளை பாதுகாக்க தரமான ஆஸ்பத்திரிகள் இல்லாததும், தகுதியான டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் இல்லாததும் முக்கிய காரணங்களாகும்.

கடந்த ஆண்டு சீனாவில் 2,760 பேரிடம் இருந்து நுரையீரல்கள் தானமாக பெறப்பட்டது. அவற்றில் 150 மட்டுமே நோயாளிகளுக்கு பொருத்துப்பட்டது.

மற்றவை அனைத்தும் வீணாகி விட்டதாக ஜியாங் ஸு மாகாணத்தில் வுசூ நகரில் உள்ள முன்னணி நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் சென் சிங் யூ தெரிவித்துள்ளார்.

சீனாவை பொறுத்தவரை நோயாளி மூளை சாவு அடைந்த ஒரு வாரத்துக்கு பிறகு தான் உடல் உறுப்புகள் தானமாக பெறப்படுகின்றன. ஆனால் மேற்கத்திய நாடுகளில் 42 மணி நேரத்திலேயே தானமாக பெறப்படுகிறது.

அதனால் தான் தானமாக பெறப்படும் இருதயம், நுரையீரல் போன்ற உறுப்புகள் வீணாகின்றன என்றும் அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வரும் 2050-ம் ஆண்டில் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும்: அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரிக்கை…!!
Next post நண்பரின் மனைவியை கொலை செய்த வழக்கு: சிங்கப்பூரில் இந்தியருக்கு 10 ஆண்டு சிறை…!!