புதிய அதிபராக மஹமடோ ஐசோபோ பதவி ஏற்றார் – நைஜீரியா நாட்டு மந்திரிசபை கூண்டோடு ராஜினாமா…!!

Read Time:1 Minute, 33 Second

201604031307063802_Niger-ministers-resign-after-presidential-inauguration_SECVPFநைஜீரியா நாட்டு அதிபரை தேர்வு செய்ய கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட தேர்தலில் முன்னாள் அதிபரான மஹமடோ ஐசோபோ மீண்டும் வெற்றி பெற்றார். அடுத்த ஐந்தாண்டுகளுக்கான அந்நாட்டின் அதிபராக நேற்று அவர் பதவி ஏற்றார்.

பதவி ஏற்புக்கு பின்னர் நைஜீரியாவின் புதிய பிரதமராக பிரிஜி ரஃபினி என்பவரை அவர் நியமித்தார். இந்த பதவியை ஏற்றுக்கொண்ட பிரிஜி ரஃபினியிடம் இதுநாள்வரை அந்நாட்டின் மந்திரிகளாக செயல்பட்டுவந்த அனைவரும் தங்களது ராஜினாமா கடிதங்களை அளித்தனர்.

அவர்களின் ராஜினாமா ஏற்கப்பட்டதாகவும், புதிய மந்திரிகள் நியமிக்கப்படும்வரை அந்தந்த துறையை சேர்ந்த தலைமை செயலாளர்கள் வழக்கமான அலுவல்களை கவனிப்பார்கள் எனவும் அதிபர் மாளிகை அறிவித்துள்ளது.

புதிய மந்திரிகளை பிரதமர் தேர்வு செய்த பின்னர் அந்த பெயர் பட்டியல் அதிபருக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் ஒப்புதல் அளித்தவுடன் புதிய மந்திரிசபை பொறுப்பேற்றுக் கொள்ளும் என உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தைகளுக்கு எண்ணெய் மசாஜ் அவசியமா?
Next post மேட்டூர் அருகே தாய்–தந்தை, சகோதரியை வெட்டி கொன்ற விவசாயி…!!